ஞாயிறு, 23 நவம்பர், 2014

Monday, November 17, 2014

தூய்மை இந்தியாவின் கனவான்களுக்கு..



எங்கள் குடியிருப்புக்கு அரசு சுகாதரப்பணியில் இருக்கும்
பெண்கள் வந்தார்கள். பால்கனியில் இருக்கும் செடிகளில்
தண்ணீர் தேங்க கூடாது, பூந்தொட்டிகளின் கீழ் தண்ணீர்
ஒழுகாமல் இருக்க வைத்திருக்கும் தட்டுகளைக் கூட
அக்ற்றிவிட்டு ஒவ்வொரு வீடாக கதவைத் தட்டி
டிப்ஸ் வேறு சொல்லிவிட்டுப் போனார்கள்.

பரவாயில்லையே... தூய்மை இந்தியா ஏதோ ஒரு வ்கையில்
வெற்றிகரமாக செயல்படுகிறது. எதற்கெடுத்தாலும் அரசை,
அதிலும் குறிப்பாக் மோதியை விமர்சனம் செய்வதை
தவிர்க்கலாமோ, இன்றைக்கு யார் யார் கையில் எல்லோமோ
'துடைப்பத்தைக் கொடுத்து"  போஸ் கொடுக்க வைத்துவிட்டாரே
என்று பேசும் கன்வாண்களின் கவனத்துக்கு:

மும்பையின் மக்கள் தொகையில் 54% மக்கள் குடிசைப்பகுதியில்
வாழ்கிறார்கள். 25% முதல் 35% வரை மக்கள் சால் வீடுகளிலும்
சாலையோரங்களிலும் வசிக்கிறார்கள். மீதி 10 % முதல் 15%
மக்கள் தான் அடுக்குமாடி குடியிருப்புகளில் , அப்பார்ட்மெண்ட்
வீடுகளில் வாழ்கிறார்கள். உலக வங்கி 2025ஆம் ஆண்டில்
சற்றொப்ப 22.5 மில்லியன் மக்கள் மும்பையில் குடிசைவாசிகளாக
இருப்பார்கள் என்று அறிவித்திருக்கிறது.
காங்கிரசும் சிவசேனாவும் இக்குடிசை மக்களின் வாழ்க்கையில்
விளக்கேற்றப் போவதாக - குடிசை மாற்று வாரியத்தின்
திட்டங்களை அறிவித்திருந்தார்கள். இதுவரை அத்திட்டங்கள்
முழுமையடையவில்லை. தற்போது ஆளும் கட்சியாக
மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் பாரதீய ஜனதா கட்சி
"தூய்மை இந்தியா" என்று பேசுகிறது.

இக்குடிசைகளின் வாழ்க்கையை மக்கள் நலன் அரசாக
கவனிக்கத் தவறிவிட்டு இவர்கள் பேசும் தூய்மை இந்தியா
எவ்வளவு போலியானது!  ஒருவேளை இக்குடிசைகளில்
இருக்கும் மனிதர்களை இவர்கள் இந்தியர்களாக, ஏன் மனிதர்களாக
நினைக்கவே இல்லையோ?

"அம்மாக்களின் அவஸ்தை" என்ற தலைப்பில் நான் எழுதிய
கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

இரண்டு நிமிசத்திற்கு ஒரு டிரெயின்.
அறிவித்தார் அமைச்சர்
அச்சப்பட்டார்கள் என் அம்மாக்கள்
அடிக்கடி எழுந்து நிற்கும்
அவஸ்தையை நினைத்து.
..
டிரெயினில் பயணம் செய்யும் எவரும் எல்லா மாநிலங்களிலும்
இக்காட்சியை இந்தியாவில் தான் பார்க்க முடியும்.
இதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தலை குனிய வேண்டும்.
வெட்கமா இல்ல ... தூய்மை இந்தியானு மேனா மினிக்கியாட்டம்
போஸ் கொடுக்கறதுக்கு.. ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்..
உள்ள இருக்காம் ஈறும் பேனும்.. போங்கடா.. நீங்களும்
உங்க நாறுன பொழைப்பும்.!

-புதிய மாதவி சங்கரன் அவர்களது வலைப்பதிவிலிருந்து.
                                                
                                                                                                          நன்றி!

வியாழன், 4 செப்டம்பர், 2014

அண்ணா இறந்தபோது ஜெயகாந்தன்



அண்ணா இறந்தபோது ஜெயகாந்தன் பேசியது
அண்ணாவோ உண்மையில் கட்சியைத் தாண்டி பலருடைய நன்மதிப்பைப் பெற்றவர்.
அந்த சமயத்தில் ஜெயகாந்தன் காங்கிரஸ்காரர். காங்கிரசுக்குக்காக அவர், நா.பார்த்தசாரதி, சிவாஜி கணேசன், சோ ராமசாமி, கண்ணதாசன் மாதிரி கலை இலக்கிய நாடக உலக பிரபலங்கள் எல்லாம் காங்கிரசின் பிரச்சார பீரங்கிகள். பேச்சாற்றல், இல்லாவிட்டால் சினிமாக்கார கரிஸ்மா எதையாவது வைத்து அவர்களுக்கும் கூட்டம் வந்தது.
அண்ணா நோய் தாக்கி இறந்து போனார். நாகரிகம் கருதி அது நாள் வரை எதிர்த்தவர்கள் கூட அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். கண்ணதாசன் மாதிரி அண்ணாவுடன் பழகியவர்கள், அண்ணாவின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்தவர்கள் காங்கிரஸ் “சார்பாகவே” அவருக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினார்கள். ஜெயகாந்தன் அங்கே சிங்கம் போல போயிருக்கிறார். இறந்துவிட்டார் என்பதற்காக இது நாள் வரை நான் அவரைப் பற்றி சொன்னதெல்லாம் வாபஸ் வாங்க முடியாது, அவருடைய வழிமுறைகளுக்கு நான் எப்போதும் எதிரி, அவர் மீது எனக்கு இருந்த விமர்சனங்கள் எல்லாம் அவர் இறந்துவிட்டதால் மறைந்துவிடாது, நாகரீகம் கருதி அவரது குறைகளை இந்த சமயத்தில் பெரிதாக சொல்லாமல் இருப்பது வேறு, அவரிடம் குறையே இல்லை என்று பேசுவது வேறு என்று முழங்கி இருக்கிறார். இட்லிவடை தளத்தில் அவரது பேச்சை போட்டிருந்தார்கள். அதைப் பற்றி அப்போதே எழுத கை வரவில்லை. அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:
"இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப் போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனி மனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.
அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும் மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.
அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.
பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை"…
Like                                                                                                                                                     
                                                                                                                                                           Guru Manutd

புதன், 20 ஆகஸ்ட், 2014

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களின் தேவைதான் என்ன?

2012-ம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது, ஹிந்தித் திரையுலகின் முக்கிய நாயகியாகக் கோலோச்சியவரும், தமிழ்த் திரையின் காதல் மன்னனாக கொடிகட்டிப் பறந்த ஜெமினி கணேசன் அவர்களின் புதல்வியுமான நடிகை ரேகா அவர்களுக்கும், கிரிக்கெட்டின் பல உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கருக்கும் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது; அவர் பதவி ஏற்றபோது நடிகை ரேகா, தொழில் அதிபர் அனு ஆகா ஆகியோரும் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றனர். இதுபோல வாஜ்பாய் ஆட்சியில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்களுக்கும், அதற்குப் பல வருடங்களுக்கு முன்பு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் இப்பதவி வழங்கப் பட்டது;

2012ம் ஆண்டு இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். அதில் இருந்து அவர்கள் நீண்ட காலமாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை.  60 நாட்கள் அவைக்கு வரவில்லை என்றால், அவர்களது பதவியை பறிக்க முடியும். கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர் வெறும் மூன்று நாட்களே அவைக்கு வந்துள்ளார். இந்தி நடிகை ரேகா 7 நாட்கள் மட்டுமே வந்துள்ளார். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்’ என்று கேட்டார்.அவரது கேள்விக்கு பதில் அளித்த பேசிய மாநிலங்களவை சபாநாயகர் ஹமீது அன்சாரி, சச்சின் டெண்டுகல் 40 நாட்கள் அவைக்கு வரவில்லை. நடிகை ரேகா அதற்கும் குறைவான நாட்களே அவைக்கு வரவில்லை. எனவே அரசியலமைப்பு மீறல்கள் எதுவும் இதில் இல்லை. 60 நாட்கள் எந்த அனுமதியும் பெறாமல் உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை என்றால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

இந்த வரிசையில் பாரதீய ஜனதா தலைவர்கள் மற்றும் நடிகை ஹேமா மாலினி மற்றும் சத்ருகன் சின்ஹா உள்ளனர். எல்லோரையும் விட கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வருகை மிகவும் மோசமாக உள்ளது. 3 நாட்கள் மட்டும் அவைக்கு வந்த அவர் இந்த ஆண்டு பாராளுமன்றத் தொடர் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் பாராளுமன்றத்தில் நடந்த எந்த ஒரு விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. 41 வயதான சச்சின் தெண்டுல்கர் ஜூன் 2012 ல் ஒரு உறுப்பினராக பதவியேற்ற போது விளையாட்டுக்கு ஒரு குரல் ஆதரவாக இருக்கும் என்று உறுதியளித்தார்.     இராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் திராப்பட நடிகை - நர்கீஸ் தத். 


     ஹிந்தித் திரைப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அவர்களும் சில

தொழிலதிபர்களும்கூட நியமன எம்பிக்களாக உள்ளனர்


வ.எண்.உறுப்பினர் பெயர்அரசியல் கட்சிபதவிக்காலம்
1மணிசங்கர் அய்யர்இந்திய தேசிய காங்கிரஸ்22-03-2010 முதல் 21-03-2016 வரை
2ஜாவீத் அக்தார்நியமனம்22-03-2010 முதல் 21-03-2016 வரை
3சியாம் பெனகல்நியமனம்16-06-2006 முதல் 15-06-2012 வரை
4சோபனா பார்த்தியாநியமனம்16-06-2006 முதல் 15-06-2012 வரை
5ஹெச்.கே.துவா ஸ்ரீநியமனம்18-11-2009 முதல் 17-11-2015 வரை
6டாக்டர் அசோக் எஸ்.கங்குலிநியமனம்18-11-2009 முதல் 17-11-2015 வரை
7பி.ஜெயஸ்ரீநியமனம்22-03-2010 முதல் 21-03-2016 வரை
8டாக்டர். ராம் தயாள் முண்டாஇந்திய தேசிய காங்கிரஸ்22-03-2010 முதல் 21-03-2016 வரை
9டாக்டர் பால்சந்திரா மங்கேகர்நியமனம்22-03-2010 முதல் 21-03-2016 வரை
10பேராசிரியர். எம்.எஸ்.சுவாமிநாதன்நியமனம்10-04-2007 முதல் 09-04-2013 வரை
11டாக்டர். கபிலா வாத்சாயன்நியமனம்10-04-2007 முதல் 15-02-2012 வரை
12காலியாக உள்ளது

ராஜ்ய சபா நியமன உறுப்பினர்கள்

மத்திய ரிசர்வ் வங்கியின் வெளியேறும் ஆளுநர் பிமல் ஜலான், ஹிந்தி சினிமாவின் முன்னாள் நடிகை ஹேம மாலினி (கும்பகோணம் பெண் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்), இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் கஸ்தூரி ரங்கன், மல்யுத்த வீரர் தாரா சிங், தில்லியிலிருந்து வெளியாகும் 'தி பயனீர்' ஆங்கில செய்தித்தாள் ஆசிரியர் சந்தன் மித்ரா, சமூக சேவகர் நாராயண் சிங் (என்ன சேவை புரிந்தவர் என்று தெரியவில்லை) மற்றும் ஹிந்தி அறிஞர் வித்யா நிவாஸ் மிர்தா ஆகிய ஏழு பேர்களும் பாராளுமன்றத்தின் மேலவைக்கு நியமன உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வைஜெயந்தி மாலா பாலி மற்றும் லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட திரைத்துறையினரும் நியமன எம்பிக்களாக இருந்துள்ளனர்.
Records from the Rajya Sabha show that except film actress Shabana Azami who has highest attendance among celebrities, none of them could make the Rajya Sabha a platform to raise issues of public interest. Singer Lata Mangeshkar and painter M F Husain, on the other hand, had the worst record of not only attending the House but also in participating in a debate or raising any issue.
Fifteen out of 118 members 'nominated' to the Rajya Sabha since 1952 were from different 'arts' fields. It included Prithvi Raj Kapoor, Vajayantimala Bali, Nargis Dutt, Mrinal Sen, Shyam Benegal, Pandit Ravi Shankar and Hema Malini.
Analysis of the attendance records of these members during six consecutive Sessions of their tenure shows Lata Mangeskar who was the Rajya Sabha MP from November 22, 1999 to November 21, 2005 had attended only six out of over 170 sittings 2000-01.
Filmmaker Mrinal Sen had more or less similar records when he had attended 30 out of 170 sittings of Upper House during the same period as compared to 113 by Shabana Azami. SimilarlyHema Malini and wrestler DarA Singh who also acted in film and tele-serials too had poor records of attending House proceedings.
Hema Malini who was nominated to the House as MP in August, 2003 had attended only 50 out of 127 sittings during 2004-05 as against Dara Singh who attended 76 sittings during the same period. Though their numbers were higher than Lata, Husain or Mrinal Sen, their record was still quite poor as compared to active politicians, academicians, writers or retired civil servants who joined the Upper House.
The reason for their absence may vary from person to person, but it has put the debate back on the table after the government on Thursday nominated film actress Rekha and cricket iconSachin Tendulkar for the Rajya Sabha. Since Sachin is still an active cricketer, it is to be seen whether he would be absent from the Rajya Sabha like most of celebrities or he would rather mark for himself in Parliament, like he has on the cricketing field.





புதன், 18 ஜூன், 2014

விவேகமற்ற விவேக்!


புகைப்படம்: தவறான தமிழ் விரோத செய்தியை வெளியிட்ட நடிகர் விவேகுக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் !  

இன்று 13/06/2014 காலை 98.3 பண்பலையில் நடிகர் விவேக் அவரது ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறான செய்தி ஒன்றை நேரலையில் பதிவு செய்தார். அவர் கூறியதாவது , சமஸ்க்ரித மொழியில் இருந்து தான் உலக மொழிகள் எல்லாம் பிறந்தன. தமிழும் சமஸ்க்ரித மொழியில் இருந்து தான் பிறந்தது என்று பிழையான செய்தியை வெளியிட்டு தமிழ் மொழியை இழிவு செய்துள்ளார். 

இந்தத் தாய் அவளுடைய பிள்ளைக்கு பிறந்தவள் என்று சொல்வது போல் உள்ளது நடிகர் விவேக்கின் கூற்று . விவேக் அவர்களுக்கு மொழி குறித்த அறிவோ, தமிழ் மொழி வரலாறோ தெரியவில்லை எனில் அதை பற்றி பேசக் கூடாது. 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி இந்தியாவின் முதல் செம்மொழி என்ற தகுதியை பெற்றது. செம்மொழி ஆகுவதற்கு பல்வேறு தகுதிகள் வேண்டும் . அதில் ஒன்று பிறமொழிகளின் துணையில்லாமல் தானே தனித்து நிற்கும் திறன் இருக்க வேண்டும் என்பது தான். இந்திய மொழிகளில் தமிழுக்கு மட்டுமே அந்த சிறப்பு உள்ளது . இதை அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் என்பவர் உறுதிபட கூறியுள்ளார்.

மேலும் தமிழ் தான் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்குகிறது என்பதை தேவநேய பாவாணர் போன்ற பன்மொழி அறிஞர்கள் நிரூபித்து உள்ளனர். தமிழின் தாக்கம் கண்டம் விட்டு கண்டம் சென்றுள்ளதை உலக மொழிகளில் பார்க்க முடிகிறது . ஜப்பானியர்களும் , கொரியர்களும் அவர்கள் மொழியில் தமிழின் தாக்கம் உள்ளது என்பதை எடுத்துக் கூறுகின்றனர். இந்திய அளவில் அதிக கல்வெட்டுக்களும், வரலாற்றுக்கு முந்தைய எழுத்துருக்களும் காணப்படுவது தமிழ் மொழியில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்று தமிழினத் தொன்மையை  தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன . 

அப்படி ஒரு தற்சார்புள்ள, தனித்துவமான தமிழ் மொழியை சமஸ்க்ரித  மொழிக்கு பிறந்த மொழி என்று தமிழரான விவேக் கூறியுள்ளது வேதனையானது , கண்டனத்திற்கு உரியது . இவ்வாறு தவறான செய்தியை வெளியிட்ட நடிகர் விவேக் தனது தவறை திருத்திக் கொண்டு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கேட்டுக் கொள்கிறது. இனி வரும் காலங்களில் விவேக் தனது படங்களிலோ , பொது ஊடகங்களிலோ இது போன்ற பிழையான தமிழ் விரோத செய்தியை வெளியிட்டு தமிழ் மக்களை புண்படுத்த  வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம். 

தமிழர் பண்பாட்டு நடுவம்



பட  உதவி :  இராசகுமார் 

தனித்து இயங்கக்கூடியதும், காலத்தில் பழமையானதுமான மொழிகள்  உலகிலே இலத்தீன், ஹீப்ரு,தமிழ்,சமஸ்கிருதம்,சீனம்,அரபி போன்றவைதான்! அதனால்தான் அவை ஆறு மொழிகளும் செம்மொழி என சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே மொழித்துறை அறிஞர்கள் வகைப்படுத்தி வைத்திருந்தனர்; ஆனால் இன
்று அப்படிப்பட்ட தமிழ்மொழிக்கு சிறப்பு வசதிகள் பெற்றுத்தர முயன்ற சில அறிஞர்களைக் கைகூலியாக்கிவிட்டு, தமிழை தாங்களே கண்டுபிடித்தது போலவும் அதை மத்திய அரசில் பதிவு செய்து செம்மொழியென ஆக்கியதாகவும் பலநூறு கோடிகளைச் சுருட்டி அதற்கொரு மாநாடு நடத்தினார்கள்; அப்போது ஏற்கனவே செம்மொழியான தமிழை, அறிஞர்கள் செம்மொழியென அழைத்தத் தமிழை "நீ யாரடா புதியதாக செம்மொழி என அறிவிக்க" என்று எவனும் கேட்கவில்லை! கூடித் தாளமிட்ட கும்பல்தான் அதிகம். இன்று தமிழிலிருந்து பிறந்த மொழிகளெல்லாம் நாங்களும் எமது மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து கொடு ; எமது மொழியும் செம்மொழி தான் என கேட்கின்றன. இனி மத்திய அரசில் ஒரு மொழியின் உறுப்பினர்கள் அதிகமாக தாக்கத்தை உண்டாக்குவார்கள் எனில் அந்த மொழி தகுதியில்லாவிட்டாலும் செம்மொழி என அறிவிக்கப்படும்.அதனால்தான் இன்று அரைவேக்காடுகளெல்லாம் தனக்கும் தமிழைப் பற்றி அதிகம் தெரியும் என மார்தட்டி பேட்டி கொடுக்கிறார்கள். இது விவேக்கின் அறியாமை அல்ல; சுரணையற்றத் தமிழ்க் கூட்டம் என்ன புளுகினாலும் ஏற்றுக் கொள்ளும் என்கிற இறுமாப்பு!

                                                                                                                   -தங்க.இராசேந்திரன்.

வளர்ந்த நாட்கள்!

     1977-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பள்ளியில் (என்.எஸ்.சி.போஸ் சாலை,பூக்கடை) நான் ஒன்பதாம் வகுப்பில் படித்தபோது எனது வகுப்பிற்குத் தமிழாசிரியராகப் பாடம் நடத்தியவர் புலவர் முத்து குமாரசாமி என்பவராவார். இவர் ஒரு நல்ல ஆசிரியராகக்கூட இருந்திருக்கலாம்; ஆனால், அவ்வருடத் தொகுப்பில் அவரிடம் நாங்கள் மாட்டிக்கொண்டோம்; கவிதை, செய்யுள் போன்ற பாடத்திற்கு மட்டுமே பாடம் நடத்திய அவர் தான் ஒரு சீனியர் என்ற எண்ணத்துடன், மாணவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ தன் கடமையை முடித்துவிட்டு, பேச்சின் நடுநடுவே, அந்த நாளில் எங்களுக்குக் கலைஞரைப் பிடித்திருந்தாலும்கூட,எரிச்சல் ஏற்படும் அளவிற்கு 45 நிமிட வகுப்பில் தினமும் ஐந்து நிமிடம் கலைஞரைப் புகழ்ந்துவிட்டு, ஐந்து நிமிடம் எம்ஜியாரைத் திட்டிவிட்டுத்தான் செல்வார்! தமிழ் உரைநடை ஆசிரியர் சண்முகம் மிகவும் எளிமையானவர் - புத்தகத்தில் உள்ளதை நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லுவார். ஆனால், பத்தாம் வகுப்பில் எங்களுக்கு வாய்த்த தமிழாசிரியர் நல்ல நகைச்சுவையாளர்; சிறப்பாக வகுப்பை நடத்திச் செல்பவர்; என்றாலும் மிகக் கண்டிப்பானவர்; ஒருவரும் ஏமாற்ற முடியாது. மதிப்பெண்கள் மட்டுமே முக்கியம் என்பவரல்ல; இருப்பினும் நல்ல மதிப்பெண்களுடன் எங்களைத் தேறவைத்தவர்.

ஞாயிறு, 4 மே, 2014

சென்னை மாகாணம்



சென்னை மாகாணத்தின் வரைபடம் (1909)
சென்னை மாகாணம் (Madras Presidencyபிரித்தானிய இந்தியாவின் ஓரு நிருவாகப் பிரிவு. இது மெட்ராஸ் ராஜதானிசென்னை ராஜதானிமெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இதுதென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடுகேரளத்தின்மலபார்ப் பகுதி, இலட்சத்தீவுகள்ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள்,கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை இம்மாகாணத்தில் அடங்கியிருந்தன. இதன் கோடைக்காலத் தலைநகரம் உதகமண்டலம், குளிர்காலத் தலைநகரம் சென்னை.

தோற்றம்

ஆங்கிலேயர் வரவுக்கு முன்னால்

கற்காலத்திலிருந்து இந்தியாவின் தென் பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். சென்னை மாகாணத்தின் பகுதிகளை முற்காலத்தில் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், களப்பிரர், சாதவாகனர் போன்ற பல அரச வம்சங்கள் ஆண்டு வந்தன. 14-16ம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசுஇப்பகுதிகளை ஆண்டது. விஜயநகரத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் முசுலிம் ஆட்சியாளர்களும், நாயக்க மன்னர்களும்பாளையக்காரர்களும், குறுநில மன்னர்களும் இதன் பல்வேறு பகுதிகளை ஆண்டு வந்தனர். 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் வாணிபம் செய்வதற்காக இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதிக்கு வந்தனர்.

ஆரம்பகால ஆங்கிலேய வர்த்தக நிலையங்கள்

டிசம்பர் 31, 1600 இல் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசி ஓர் ஆங்கிலேய வர்த்தகர் குழுமத்துக்கு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் என்னும் கூட்டுப் பங்கு நிறுவனத்தை உருவாக்க அனுமதி அளித்தார். இந்நிறுவனம் முதலாம் ஜேம்ஸ் மன்னரின் காலத்தில் இந்தியாவில் வர்த்தக நிலையங்களை அமைக்க முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதியைப் பெற்றது. முதலில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகளில் வர்த்தக நிலையங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் முக்கிய வர்த்தகப் பொருளான பருத்திக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதாலும் கோல்கொண்டா சுல்தானின் அதிகாரிகள் காலனிய வர்த்தகர்களுக்குத் தொல்லை தந்து வந்ததாலும் கிழக்குக் கடற்கரையில்மச்சிலிப்பட்டணத்திலிருந்த வர்த்தக மையத்தை மேலும் தெற்கு நோக்கி நகர்த்த கிழக்கிந்திய நிறுவனத்தார் முடிவு செய்தனர். சந்திரகிரி அரசரிடம் பேச்சு வார்த்தை நடத்திய கிழக்கிந்தியக் கம்பனி நிருவாகி சர் பிரான்சிசு டே, மதராசப்பட்டினம் எனும் கிராமத்தருகே ஒரு வர்த்தக நிலையத்தை நிறுவ நிலஉரிமை பெற்றார். அந்நிலத்தில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இங்கு எழுந்த குடியிருப்பை நிருவாகம் செய்ய ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு ஆண்ட்ரூ கூகன் அதன் முதல் முகவரானார். இந்த அமைப்புகள் அனைத்தும் சாவகத்தி்ல் அமைந்திருந்த பாண்டம் மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. 1641 இல் மதராசப்பட்டினம் சோழமண்டலக் கடற்கரையில் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைமையிடமாக மாறியிருந்தது.

புனித ஜார்ஜ் கோட்டை முகமை

ஆண்ட்ரூ கோகனைத் தொடர்ந்து முறையே பிரான்சிசு டே, தாமசு ஐவி, தாமசு கிரீன்ஹில் ஆகியோர் ஜார்ஜ் கோட்டை முகவர்களாகப் பணியாற்றினர். கிரீன்ஹில்லின் பதவிக்காலம் 1653 ஆம் ஆண்டில் முடிவடைந்த பின்னர் ஜார்ஜ் கோட்டை ஒரு மாகாணமாகத் தரமுயர்த்தப்பட்டது; பாண்டம் மாகாணத்தின் மேற்பார்வையிலிருந்து விலக்கப்பட்டது. அதன் புதிய தலைவராக ஆரோன் பேக்கர் பதவி வகித்தார். ஆனால் 1655 இல் மீண்டும் முகமையாக தரமிறக்கப்பட்டு சூரத் வர்த்தக நிலையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. 1684 வரை இந்நிலை நீடித்தது. 1658 இல் ஜார்ஜ் கோட்டைக்கு அருகிலிருந்த திருவல்லிக்கேணி கிராமத்தை ஆங்கிலேயர் ஆக்கிரமித்தனர்.

வரலாறு

விரிவாக்கம்

1684ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை மீண்டும் சென்னை மாகாணமாகத் தரமுயர்த்தப்பட்டது. வில்லியம் கிஃப்பர்ட் அதன் முதல் தலைவரானார்.அப்போதிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தொடர்ச்சியாக விரிவடைந்தது. முகலாயர்கள், மராட்டியர்கள், கோல்கொண்டா நவாபுகள், கர்நாடக நவாபுகள் ஆகியோரின் தாக்குதல்களைச் சமாளித்து இந்த விரிவாக்கம் நடைபெற்றது. செப்டம்பர் 1774 இல் கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் நிருவாகத்தை ஒருங்கிணைக்க பிட்டின் இந்தியா சட்டம் (Pitt's India Act) இயற்றப்பட்டது. இதன் மூலம் சென்னை மாகாணத்தின் தலைவர் கல்கத்தாவிலிருந்து செயல்பட்ட தலைமை ஆளுனரின் அதிகாரத்துக்கு உட்பட்டவரானார். செப்டம்பர் 1746 இல் புனித ஜார்ஜ் கோட்டை பிரெஞ்சுப் படைகளால் கைப்பற்றப்பட்டு மூன்றாண்டுகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. 1749 இல் ஐக்ஸ்-லா-ஷாப்பெல் ஒப்பந்ததின்படி மீண்டும் ஆங்கிலேயர் வசமானது.

கம்பனி ஆட்சி

1774-1858 இல் சென்னை மாகாணம் கிழக்கிந்திய நிறுவனத்தால் நிருவாகம் செய்யப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வெகுவாக விரிவடைந்தது. கிழக்கிந்திய நிறுவனம், திப்பு சுல்தான்பாளையக்காரர்கள், இலங்கை அரசர்கள் ஆகியோரிடன் போரிட்டு வென்று பெரும் பகுதிகளைச் சென்னை மாகாணத்துடன் இணைத்தது. (1793-98 காலகட்டத்தில் மட்டும் இலங்கை சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது). ஆர்தர் வெல்லஸ்லி உருவாக்கிய துணையாட்சிக் கூட்டணிகள் மூலம் பல உள்ளூர் சமஸ்தானங்கள் சென்னை ஆளுனருக்குக் கட்டுப்பட்டன.விசாகப்பட்டினம் மற்றும் கஞ்சாம் ஆகியவையே இறுதியாகச் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டப் பகுதிகள். இக்காலகட்டத்தில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிராக இப்பகுதியில் சில கலகங்கள் நடந்தன. 1806 இல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் எழுச்சி அவற்றுள் முதன்மையானது.. இது முதல் விடுதலைப் போர் என்றும் கூறப்படுகின்றது. வேலுத்தம்பிபள்ளியத்து அச்சன் ஆகியோரின் புரட்சிகளும் இருபாளையக்காரர் போர்களும் இக்காலகட்டத்தில் நடைபெற்ற பிற குறிப்பிடத்தக்க கலகங்கள். ஆனால் 1857 இல் வட இந்தியாவில் தீவிரமாக நடைபெற்றசிப்பாய்க் கிளர்ச்சியால் சென்னை மாகாணம் அதிகமாக பாதிக்கப்படவில்லை.. இதுவும் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என்று கூறப்படும் ஓர் எழுச்சி.

சென்னை மாகாண மாவட்டங்களைக் காட்டும் 1859 ஆம் ஆண்டு வரைபடம்.
மைசூர் அரசர் மும்மடி கிருஷ்ணராஜ உடையாரின் நிருவாகத்தில் முறைகேடுகள் மலிந்துவிட்டன என்று காரணம் காட்டி 1831 இல் கிழக்கிந்திய நிறுவனம், மைசூர் அரசை சென்னை மாகாணத்துடன் இணைத்தது. ஆனால் 1881ம் ஆண்டு கிருஷ்ணராஜ உடையாரின் பேரன் சாம்ராஜ் உடையாரிடம் மைசூரின் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் கடைசி அரசர் இரண்டாம் சிவாஜி 1855 ம் ஆண்டு ஆண் வாரிசின்றி இறந்ததை அடுத்து, தஞ்சாவூரும் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

1913 இல் சென்னை மாகாணம்

விக்டோரியா காலம்

1858 இல் விக்டோரியா அரசியின் உத்தரவின் படி இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பிரித்தானிய இந்தியா என்ற பெயரில் பிரித்தானிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன. ஹாரிஸ் பிரபு சென்னையின் முதல் ஆளுனராக பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். நாட்டின் நிருவாகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்திய கவுன்சில் சட்டம், 1861 ஆளுனரின் நிருவாகக் குழுவுக்கு சட்டமியற்றும் உரிமைகளை அளித்தது. 1892 மற்றும் 1909 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட கவுன்சில் சட்டங்கள் ஆளுனரின் நிருவாகக் குழுவை மேலும் விரிவுபடுத்தி புனரமைத்தன. வி. சடகோபச்சாருலு இக்குழுவின் முதல் இந்திய உறுப்பினராவார். கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் சட்டத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். 1877 இல் டி. முத்துசாமி ஐயர்சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு ஆங்கிலோ இந்திய ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவரே சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதியாகவும் பணியற்றினார் (1893 இல்). 1906 இல் சி. சங்கரன் நாயர், தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரானார்.
இக்காலகட்டத்தில் பல சாலைகள், தொடருந்து இருப்புப் பாதைகள், அணைகள், கால்வாய்கள் போன்றவை சென்னை மாகாணத்தில் கட்டபட்டன.சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78இந்தியப் பஞ்சம், 1896–97 ஆகிய இரு பெரும் பஞ்சங்கள் இக்காலகட்டத்தில் சென்னை மாகாணத்தைப் பீடித்தன. பஞ்சத்தின் பாதிப்பால் 1871 இல் 3.12 கோடியாக இருந்த மாகாண மக்கள் தொகை 1881 இல் 3.08 கோடியாகக் குறைந்தது. இப்பஞ்சங்களும்செங்கல்பட்டு உழவர் வழக்கு (1881-83), சேலம் கலவர வழக்கு (1882) ஆகிய நிகழ்வுகளைக் காலனிய அரசு கையாண்ட முறையும் மாகாண மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.

விடுதலை இயக்கத்தின் தொடக்க காலம்

19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் சென்னை மாகாண மக்களிடைய தேசியவாதம் தலைதூக்கியது. இம்மாகாணத்தில் தொடங்கப்பட்ட முதல் அரசியல் அமைப்பு, 1852 இல் கசுலு லட்சுமிநரசு செட்டி என்பவர் தொடங்கிய சென்னை மக்கள் சங்கம் (Madras Native Association) ஆகும். ஆனால் அவ்வமைப்பு நெடுநாட்கள் செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து மே 16, 1884 இல் சென்னை மகாஜன சங்கம் தொடங்கப்பட்டது. இந்திய தேசியக் காங்கிரசின் முதல் மாநாடு மும்பையில் நடைபெற்ற போது (டிசம்பர் 1885) அதில் கலந்து கொண்ட 72 மாநாட்டு உறுப்பினர்களில் 22 பேர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அந்த 22 பேரில் பலர் சென்னை மகாஜன சங்கத்தின் உறுப்பினர்கள். காங்கிரசின் மூன்றவது மாநாடு டிசம்பர் 1887 இல் சென்னை நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாகாணம் முழுவதிலிருந்தும் 362 பேர் இதில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் 1894, 1898, 1903, 1908, 1914 மற்றும் 1927 ஆகிய ஆண்டுகளிலும் காங்கிரசு மாநாடுகள் சென்னையில் நடைபெற்றன.
1882 இல் எலனா பிளவாத்ஸ்கி மற்றும் ஹென்றி ஆல்காட் ஆகியோர் பிரம்மஞான சபையின் தலைமையகத்தைஅடையாறுக்கு மாற்றினர். இந்த சபையின் முக்கிய புள்ளியான அன்னி பெசண்ட் 1916 இல் இந்திய ஹோம் ரூல்இயக்கத்தைத் தொடங்கினார். சென்னையிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட இந்த இயக்கத்துக்கு மாகாணம் முழுவதும் பெரும் ஆதரவு கிட்டியது. சென்னையிலிருந்து வெளியான தி இந்துசுதேசமித்திரன்மாத்ருபூமி போன்ற தேசியவாத இதழ்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தன. திரு. வி.காவும்பி. பி. வாடியாவும் இணைந்து இந்தியாவின் முதல் தொழிலாளர் சங்கத்தை 1918 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவினர்.

இரட்டை ஆட்சி (1920-37)

தியாகராய செட்டி (இடது) பிராமணரல்லாதோர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்; பெரியார் (வலது) சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியவர்தியாகராய செட்டி (இடது) பிராமணரல்லாதோர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்; பெரியார் (வலது) சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியவர்
தியாகராய செட்டி (இடது) பிராமணரல்லாதோர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்; பெரியார்(வலது) சுயமரியாதை இயக்கத்தைஉருவாக்கியவர்
இந்திய அரசுச் சட்டம், 1919 இன் விளைவாக 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை உருவாக்கப்பட்டு முதன்முறையாக நேரடித் தேர்தல் நடைபெற்றது. இவ்வாட்சிமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும் ஆளுனரின் நிருவாகக் குழுவும் இணைந்து மாகாணத்தை நிருவகித்தன. பிராமணரல்லாதோரின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சிமுதல் தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்தது. அ. சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரானார். ஆனால் உடல்நலக் குறைப்பாடு காரணமாக விரைவில் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து பனகல் அரசர் முதல்வரானார். அவரது ஆட்சியில் அரசுப்பணிகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க முதல் அரசாணை (# 613) வெளியிடப்பட்டது. இது தான் இந்தியாவில் இட ஒதுக்கீடுபற்றிய முதல் அரசு நடவடிக்கையாகும். இரண்டாம் மாகாணத் தேர்தலிலும் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால் உட்கட்சிப் பூசல் காரணமாக விரைவில் பிளவடைந்தது. 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டது. பெரும்பான்மை இடங்களை வென்ற சுயாட்சிக் கட்சி அரசமைக்க மறுத்து விட்டதால், ஆளுனர் ஜார்ஜ் கோஷன், ப. சுப்பராயன் தலைமையிலான சுயேச்சைகளின் அரசை உருவாக்கினார். 1930 தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி வெற்றி பெற்று பி. முனுசாமி நாயுடு முதல்வரானார். உட்கட்சிப் பூசல் காரணமாக நவம்பர் 1932 இல் அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார்; அவருக்கு பதில் பொபிலி அரசர்முதல்வரானார். இந்திய அரசுச் சட்டம், 1935 இன் படி இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1937 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்து இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியைக் கைப்பற்றியது.
1920களிலும் 30களிலும் சென்னை மாகாணத்தில் பிராமண எதிர்ப்பு இயக்கம் உருவாகி வலுவடைந்தது. மாகாண காங்கிரசுக் கட்சியில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாமல் காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் ஈ. வே. ராமசாமி இதனைத் தொடங்கினார். பார்ப்பனர்கள், இந்து சமயம், சாதிப் பாகுபாடுகள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை தமது எழுத்துகளால் சாடினார்.

பிரித்தானிய ஆட்சியின் இறுதி நாட்கள்


ராஜாஜி, இந்திய தேசிய காங்கிரசு 1937 இல் ஆட்சியமைத்த போது முதல்வரானார்.
1937 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி சென்னை மாகாண முதல்வரானார். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக் கோயில்களில் நுழைந்து வழிபடும் வகையில் ஆலய நுழைவுச் சட்டத்தை இயற்றினார். மதுவிலக்குவிற்பனை வரி ஆகியவற்றையும் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தி மொழியைச் சென்னை மாகாணப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கினார். இக்கொள்கைக்கு மாகாண மக்களிடையே பரவலான எதிர்ப்பு இருந்தது; இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றைப் பெரியாரின் பகுத்தறிவு இயக்கமும், அ. தா. பன்னீர்செல்வத்தின் தலைமையில் நீதிக்கட்சியும் இப்போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றன. போராட்டங்களில் ஈடுபட்ட 1,200 ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சிறையிலடைக்கப்பட்டனர். தாளமுத்து, நடராசன் எனும் இரு போராட்டக்காரர்கள் மரணமடைந்தனர்.[65][65] 1939ம் ஆண்டு இந்தியா முழுவதும் பதவியிலிருந்த காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகின. இந்தியர்களைக் கலந்தாலோசிக்காமல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவைக் காலனிய அரசு ஈடுபடுத்தியது இம்முடிவுக்குக் காரணமாக இருந்தது. இதன் பின்னர் சென்னை மாகாணம், சென்னை ஆளுனரால் நேரடியாக நிருவாகம் செய்யப்பட்டது. பெப்ரவரி 21, 1940 இல் ஆளுனர் கட்டாய இந்தி அரசாணையை நீக்கினார்.
காங்கிரசின் பெரும்பான்மையான தலைவர்கள் 1942 இல் தீவிரமாக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றனர். 1944 இல் நீதிக்கட்சி பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து அதை விலக்கிக் கொண்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மீண்டும் காங்கிரசு தேர்தல்களில் போட்டியிட்டது. 1946 தேர்தலில் எளிதில் வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. த. பிரகாசம்11 மாதங்கள் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். இந்தியா ஆகஸ்ட் 15, 1947 இல் விடுதலையடைந்தது. சென்னை மாகாணம் சென்னை மாநிலம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜனவரி 26, 1950 இல் இந்தியா குடியரசான பின்னர் குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக மாறியது.

மக்கள் தொகையியல்

1822 இல் சென்னை மாகாணத்தில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மாகாணத்தின் மக்கள் தொகை 13,476,923 எனக் கணக்கிடப்பட்டது. 1836–37 இல் நடைபெற்ற இரண்டாவது கணக்கெடுப்பில் மக்கள் தொகை 13,967,395 ஆக உயர்ந்திருந்தது. 1851 இல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் வழக்கம் ஆரம்பமானது. 1851-52 இல் நடைபெற்ற முதல் ஐந்தாண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் எண்ணிக்கை 22,031,697 ஆக இருந்தது. அடுத்த கணக்கெடுப்புகள் 1856–57, 1861–62 மற்றும் 1866–67 இல் நடைபெற்றன. மக்கள் தொகை, 1861–62 இல் 22,857,855 ஆகவும் 1866–67 இல் 24,656,509 ஆகவும் உயர்ந்திருந்தது.
பிரித்தானிய இந்தியாவில் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 1871 இல் நடைபெற்றது. அதன்படி சென்னை மாகாண மக்கள் தொகை 31,220,973. இதன் பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. பிரித்தானிய இந்தியாவில் இறுதியாக நடைபெற்ற கணக்கெடுப்பின்படி (1941) சென்னை மாகாண மக்கள் தொகை 49,341,810.

மொழிகள்


சென்னை மாகாணத்தின் மொழிப்பரவல் வரைபடம் (1913)
சென்னை மாகாணத்தில் தமிழ்தெலுங்குமலையாளம்கன்னடம்ஒடியாதுளுஆங்கிலம் போன்ற மொழிகள் அதிக அளவில் பேசப்பட்டன. மாகாணத்தின் தென் மாவட்டங்களில் (சென்னை நகருக்கு வடக்கில் சில மைல்களில் தொடங்கி தெற்கில் கன்னியாகுமரி வரையும் மேற்கில் நீலகிரி / மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் வரையிலுமான பகுதி) தமிழ் பேசப்பட்டது. சென்னை நகருக்கு வடக்கிலும், பெல்லாரி, அனந்தபூர் மாவட்டங்களுக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளிலும் தெலுங்கு பேசப்பட்டது. தெற்கு கனரா மாவட்டம், பெல்லாரி மற்றும் அனந்தபூர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகள் மற்றும் மலபார் மாவட்டத்தின் சில பகுதிகளில் கன்னடம் பேசப்பட்டது. மலபார் மற்றும் தெற்கு கனரா மாவட்டம், திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் ஆகிய பகுதிகளில் மலையாளம் பேசப்பட்டது. தெற்கு கனரா மாவட்டத்தில் மட்டும் துளு பேசப்பட்டது. கஞ்சாம் மாவட்டத்திலும் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஒடியா பேசப்பட்டது. ஆங்கிலோ இந்தியர்களும், ஆசிய-ஐரோப்பிய கலப்பின மக்களும் ஆங்கிலம் பேசினர். ஆங்கிலமே மாகாணத்தின் இணைப்பு மொழியாகவும் பிரித்தானிய இந்தியாவின் அலுவல் மொழியாகவும்விளங்கியது. அரசின் நிருவாகச் செயல்பாடுகளும் நீதிமன்ற வழக்குகளும் ஆங்கிலத்தில் நடைபெற்றன.
1871 கணக்கெடுப்பின் படி மாகாணத்தில் 14,715,000 தமிழ் பேசுவோர், 11,610,000 தெலுங்கு பேசுவோர், 2,324,000 மலையாளம் பேசுவோர், 1,699,000 கன்னடம் பேசுவோர், 640,000 ஒடியா பேசுவோர் மற்றும் 29,400 துளு பேசுவோர் இருந்தனர். 1901 கணக்கெடுப்பின் படி மாகாணத்தில் 15,182,957 தமிழ் பேசுவோர், 14,276,509 தெலுங்கு பேசுவோர், 2,861,297 மலையாளம் பேசுவோர், 1,518,579 கன்னடம் பேசுவோர், 1,809,314 ஒடியா பேசுவோ, 880,145 இந்துஸ்தானி பேசுவோர் இருந்தனர். இம்மொழிகளைத் தவிர 1,680,635 பேர் வேறு மொழிகளைப் பேசி வந்தனர். இந்தியா விடுதலை அடையும் தருவாயில் சென்னை மாகாண மக்களில் 78% பேர் தமிழ் அல்லது தெலுங்கு பேசுபவர்களாக இருந்தனர். எஞ்சியிருந்தோர் கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளைப் பேசி வந்தனர்.

சமயங்கள்


தஞ்சாவூரில் ஒரு குருகுலத்தில் ஐயங்கார்மாணவர்கள் (1909)

ஒரு ஐயனார் கோயில் (1911)

ஒரு இஸ்லாமியச் சிறுவன் (1914)
1901 இல் சென்னை மாகாணத்தில் 37,026,471 இந்துக்கள், 2,732,931 முசுலிம்கள் மற்றும் 1,934,480 கிறித்தவர்கள் இருந்தனர். 1947 இல் இந்தியா விடுதலை அடையும் தருவாயில் சென்னை மாகாணத்தில் 49,799,822 இந்துக்கள், 3,896,452 முசுலிம்கள் மற்றும் 2,047,478 கிறித்தவர்கள் இருந்ததாக கணிக்கப்பட்டிருந்து. இந்து சமயம் மாகாணத்தின் தனிப்பெரும் சமயமாக இருந்தது. மக்களில் 88% பேர் இந்துக்களாக இருந்தனர். சைவர்கள், வைணவர்கள் மற்றும் லிங்காயத்துகள் இந்துக்களிடையே இருந்த முக்கிய உட்பிரிவுகள். பிராமணரிடையே சுமார்த்த வழிபாடு பிரபலமாக இருந்தது. நாட்டுப்புற மக்களிடையே சிறுதெய்வ வழிபாடு பரவலாக இருந்தது. காஞ்சி, சிருங்கேரி, அகோபிலம், திருப்பனந்தாள், தருமபுரம், திருவாவடுதுறை போன்ற பல இடங்களிலிருந்த மடங்கள் இந்து சமய மையங்களாக விளங்கின. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்திருப்பதி வேங்கடாசலபதி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், திருவிதாங்கூர் பத்மநாப சுவாமி கோவில்ஆகியவை புகழ்பெற்ற கோயில்களாக விளங்கின.
வர்த்தகம் செய்ய வந்த அரபு வர்த்தகர்களால் தென்னிந்தியாவில் இசுலாம் அறிமுகம் செய்யப்பட்டது. 14ம் நூற்றாண்டில் மாலிக் கஃபூரின் படையெடுப்புக்குப் பின்னர் பலர் இசுலாத்திற்கு மாறினர். நாகூர் சென்னை மாகாண இசுலாமியரின் முக்கிய வழிபாட்டுத் தலமாக இருந்தது. இந்தியாவிலேயே மிகப் பழைமையான கிறித்தவ சமூகங்கள் சென்னை மாகாணத்தில் இருந்தன. புனித தோமாவால் மலபார் கடற்கரையில் கிபி 52 இல் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் சிரிய திருச்சபையின் பிரிவுகள் இவற்றில் அடங்கும். திருநெல்வேலி மற்றும் மலபார் மாவட்டங்களில் கிறித்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மக்கள் தொகையில் காற்பகுதிக்குப் மேல் கிறித்தவர்கள். நீலகிரி, பழனி, கஞ்சாம் பகுதிகளில் வாழ்ந்த தோடர், படகர், கொடவர், கோடர், யெருகலர், கோண்டுகள் போன்ற மலைவாழ் பழங்குடிகளும் இந்துக்களாகக் கருதப்பட்டனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பள்ளர்பறையர்சக்கிலியர்புலையர்மடிகா மற்றும் ஈழவர் போன்ற சாதியினர் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு வந்தனர். கோயில்களில் நுழைந்து வழிபடும் உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இந்திய பெண்களுக்கு உரிமையளிப்பு, சமூக அவலங்களை ஒழித்தல் போன்ற சமூக சீர்திருத்தங்களுடன் தீண்டாமையும் மெல்ல ஒழிக்கப்பட்டது. பொபிலி அரசரின் மாகாண அரசு (1932-36) தீண்டத்தகாதோர் எனப்பட்டவர்களைக் கோயில் அறங்காவலக் குழுக்களுக்கு நியமனம் செய்தது. 1939 இல் ராஜாஜியின் காங்கிரசு அரசு அவர்கள் கோயில்களுக்குள் நுழைந்து வழிபடலாம் என சட்டமியற்றியது. 1937 இல் திருவிதாங்கூர் அரசர் சித்திர திருநாள் தனது திவான் சி. பி. ராமசுவாமி ஐயரின் அறிவுரையின்படி இதே போன்ற ஒரு கோயில் நுழைவு சட்டத்தை இயற்றினார். 1920களில் பனகல் அரசரின் நீதிக்கட்சி அரசு இந்து அறநிலைச் சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட அறங்காவலர் குழுக்கள் இந்துக் கோயில்களை நிருவாகம் செய்யத் தொடங்கின.

நிருவாகம்

1784 ல் இயற்றப்பட்ட பிட்டின் இந்தியா சட்டம், மாகாண ஆளுனருக்குத் துணை புரிய சட்டமியற்றும் அதிகாரம் படைத்த ஒரு நிருவாகக் குழுவை உருவாக்கியது. தொடக்கத்தில் இக்குழு நான்கு பேர் கொண்டதாக இருந்தது. அதில் இரு இந்தியக் குடிமைப் பணி உறுப்பினர்களும் ஒரு குறிப்பிடத்தக்க இந்தியரும், சென்னைப் படையின் முதற்பெரும் தளபதியும் அடங்குவர். 1895 இல் சென்னைப் படை கலைக்கப்பட்டதால் நிருவாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது. இந்திய அரசுச் சட்டம், 1833 இக்குழுவுக்கு அளிக்கப்பட்டிருந்த சட்டமியற்றும் அதிகாரத்தை ரத்து செய்தது. ஆளுனருக்கு ஆலோசனை வழங்கும் ஒரு குழுவாக மட்டும் அது செயல்படத் தொடங்கியது இந்திய கவுன்சில் சட்டம், 1861 நீக்கப்பட்ட இந்த அதிகாரத்தை மீண்டும் நிருவாகக்குழுவுக்கு வழங்கியது. அடுத்த பல பத்தாண்டுகளில் பல முறை விரிவுபடுத்தப்பட்டது. 1920 இல் நேரடித் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது. 1937 இல் சட்டமன்றம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஈரரங்க அவையாக மாறியது.
1640 இல் கிழக்கிந்திய நிறுவனம் மதராசப்பட்டினம் கிராமத்தை வாங்கியதிலிருந்து சென்னை மாகாணத்தின் வரலாறு துவங்குகிறது. அடுத்து 1690 இல் புனித டேவிட் கோட்டை வாங்கப்பட்டது. 1763 இல் வாங்கப்பட்டச் செங்கல்பட்டு மாவட்டம் (அக்காலத்தில் செங்கல்பட்டு ஜாகிர் எனப்பட்டது) சென்னை மாகாணத்தின் முதல் மாவட்டமானது. 1792 இல் திப்பு சுல்தானுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்குமிடையே ஏற்பட்ட சீரங்கப்பட்டினம் ஒப்பந்தத்தை அடுத்து மலபார், சேலம் மாவட்டங்கள் சென்னை மாகாணத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. 1799 இல் நான்காம் மைசூர்ப் போரில் திப்புவை வென்ற ஆங்கிலேயப் படைகள் கனரா, கோயமுத்தூர் மாவட்டங்களை சென்னை மாகாணத்துடன் இணைத்தன. 1799 இல் தஞ்சாவூர் மராட்டிய இராச்சியத்தின் பகுதிகள், சென்னை மாகாணத்தின் அங்கமாகின. 1800 இல் ஐதராபாத் நிசாம் ஆங்கிலேயருக்குக் கொடுத்த பகுதிகள் பெல்லாரி, கடப்பா மாவட்டங்களாக மாறின. 1801 இல், கர்நாடக அரசின் வீழ்ச்சிக்குப் பின் அதன் பகுதிகள் வட ஆற்காடு, தென் ஆற்காடு, நெல்லூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களாக சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டன. ஜூன் 1805-ஆகஸ்ட் 1808 காலகட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தின் உட்பகுதியாக இருந்தது. பின் தனி மாவட்டமாக மீண்டும் மாற்றப்பட்டது. 1823 இல் ராஜமுந்திரி, மச்சிலிப்பட்டினம், குண்டூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1859 இல் இம்மூன்று மாவட்டங்களும் கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களாகப் மீளமைக்கப்பட்டன.1925 இல் கோதாவரி மாவட்டம் கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 1839 இல் குர்னூல் அரசு சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டு தனி மாவட்டமானது. 1859 இல் கனரா மாவட்டம் நிருவாக இலகுக்காக தென் கனரா, வட கனரா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் வட கனரா மும்பை மாகாணத்துடன் 1862 இல் இணைக்கப்பட்டது. 1860களில் சென்னை மாவட்டமும் செங்கல்பட்டு மாவட்டமும் ஒன்றாக இணைக்கப்பட்டன. 1868 இல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. 1908 இல், சென்னை மாகாணத்தில் மொத்தம் 24 மாவட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு மாவட்டமும் இந்தியக் குடிமைப் பணியைச் சேர்ந்த ஒரு மாவட்ட ஆட்சியரால் நிருவாகம் செய்யப்பட்டன. சில மாவட்டங்கள் மேலும் பிரிக்கப்பட்டு அப்பிரிவுகள் துணை ஆட்சியர் ஒருவரால் நிருவாகம் செய்யப்பட்டன. மாவட்டப் பிரிவுகள் மேலும் தாலூகா, பஞ்சாயத்து ஒன்றியங்கள் அல்லது கிராமக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சில நேரங்களில் அடிக்கடி கலகங்கள் ஏற்பட்டு வந்த பகுதிகள் தனி முகமைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சென்னை மாகாணத்தில் இருந்த இரு முக்கிய முகமைகள் - விசாகப்பட்டினம் மலைப்பகுதிகள் முகமையும் கஞ்சாம் மலைப்பகுதிகள் முகமையும் ஆகும். முன்னது விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரது கட்டுப்பாட்டிலும் பின்னது கஞ்சாம் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. 1936 ஆம் ஆண்டு இவ்விரு முகமைகளும் மாவட்டங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரிசா மாகாணத்திற்கும் சென்னை மாகாணத்திற்குமிடையே பங்கிடப்பட்டன.
சென்னை மாகாணத்தின் அதிகாரத்துக்கு ஐந்து மன்னர் அரசுகள் (சமஸ்தானங்கள்) இருந்தன. அவையாவன பங்கனப்பள்ளி, கொச்சி, புதுக்கோட்டை, சந்தூர், திருவிதாங்கூர். இவ்வரசுகள் அனைத்தும் குறிப்பிடத்தக்க அளவு தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்தன. ஆனால் அவற்றின் வெளியுறவுக் கொள்கை, சென்னை ஆளுனரின் பிரதிநிதி ஒருவரின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வாறு பங்கனப்பள்ளி அரசின் கொள்கைப் பிரதிநிதியாக குர்னூல் மாவட்ட ஆட்சியரும் சந்தூரின் வெளியுறவுக் கொள்கைப் பிரதிநிதி பெல்லாரி மாவட்ட ஆட்சியரும் இருந்தனர். 1800-45 மற்றும் 1865-73 காலகட்டங்களில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டையின் வெளியுறவுத் துறைப் பிரதிநிதியாக இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அப்பொறுப்பு மதுரை ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 1873 முதல் 1947 வரை திருச்சிராப்பள்ளி ஆட்சியர் அப்பொறுப்பைப் பெற்றிருந்தார்.

படை


சென்னை இலகுரகக் குதிரைப்படையின் ஐரோப்பிய அதிகாரி.
1655 இல், கிழக்கிந்திய நிறுவனம் தனது குடியிருப்புகளைக் காக்க பாதுகாவல் படைகளை அமைக்கும் உரிமை பெற்றது. சென்னை மாகாணப் படையும் உருவானது. சென்னையை முகலாய, மராத்திய மற்றும் ஆற்காடு நவாபின் படைகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தமை சென்னைப் படையின் தொடக்க காலப் படை நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கது. 1713 இல் லெப்டினன்ட் ஜான் டி மார்கன் தலைமையிலான சென்னை மாகாணப் படைகள் புனித டேவிட் கோட்டை முற்றுகையை முறியடித்ததுடன், ரிச்சர்ட் ராவொர்த் தலைமையில் நடைபெற்ற கலகத்தையும் அடக்கின.
1748 இல் பிரெஞ்சு இந்தியாவின் ஆளுனர் டூப்ளே இந்தியர்களைக் கொண்டு பட்டாலியன்களை உருவாக்கத் தொடங்கினார். அவரைப் பின்பற்றி ஆங்கிலேயர்கள் சென்னை ரெஜிமெண்ட்டை உருவாக்கினர். இது போன்ற இந்தியர் பணியாற்றும் படைப்பிரிவுகள் இந்தியாவின் வேறு பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை ஒன்றுக்கொன்று அருகாமையில் இல்லாத காரணத்தால், மூன்று மாகாணப் படைகளின் அமைப்பிலும் கோட்பாடுகளிலும் நிறைய வேறுபாடுகள் உருவாகின. சென்னைப் படையில் மலபார் மாவட்டத்தின் மாப்பிளைகளும் குடகுப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தனர்.
1795 இல் சென்னைப் படை முதல் முறையாக சீரமைக்கப்பட்டது. அதில் பின்வரும் படைப்பிரிவுகள் இடம் பெற்றிருந்தன:
  • ஐரோப்பிய காலாட்படை – இரு பட்டாலியன்கள் (ஒவ்வொன்றிலும் 10 கம்பனிகள்)
  • பீரங்கிப்படை – இரு ஐரோப்பிய பட்டாலியன்கள் (ஒவ்வொன்றிலும் ஐந்து கம்பனிகள்) மற்றும் பதினைந்து லாஸ்கர் கம்பனிகள்
  • இந்திய குதிரைப்படை – நான்கு ரெஜிமன்டுகள்.
  • இந்திய காலாட்படை – இரு பட்டாலியன்களைச் சேர்ந்த பதினோறு ரெஜிமன்டுகள்.

20வது ஜமாதார் குதிரைப்படைப் பிரிவின் ஜமாதார் (துணை அதிகாரி)
1824 இல், மீண்டும் ஒரு படைச் சீரமைப்பு நடைபெற்றது. பல இரட்டை பட்டாலியன்கள் கலைக்கப்பட்டு, எஞ்சியிருந்தவைக்கு புது எண்கள் அளிக்கப்பட்டன. அப்போது சென்னைப் படையில் ஒரு ஐரோப்பிய பிரிகேடும் ஒரு இந்திய குதிரை-இழு பீரங்கிப்படை பிரிகேடும், மூன்று பீரங்கிப்படை பட்டாலியன்களும், மூன்று இலகுரகக் குதிரைப்படை பட்டாலியன்களும், இரு பயனியர் கோர் படைப்பிரிவுகளும், இரு ஐரோப்பிய காலாட்படை பட்டாலியன்களும் 52 இந்திய காலாட்படை பட்டாலியன்களும் 3 உள்ளூர் காலாட்படை பட்டாலியன்களும் இடம் பெற்றிருந்தன.
1748-1895 காலகட்டத்தில், சென்னை, வங்காளம், மும்பை ஆகிய மூன்று மாகாணங்களின் படைகளுக்கும் முதற்பெரும் படைத்தலைவர்கள் இருந்தனர். சென்னைப் படையின் படைத்தலைவர் சென்னை ஆளுனரின் அதிகாரத்துக்கு உட்பட்டவராக இருந்தார்; ஆளுனரின் நிருவாகக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். சென்னைப் படை 1762 இல் நடைபெற்ற மணிலா சண்டை, 1795 இல் இலங்கையில் ஒல்லாந்துருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் நறுமணப் பொருள் தீவுகள் மீதான படையெடுப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றன. கர்நாடகப் போர்கள்ஆங்கில மைசூர்ப் போர்கள்மொரிசியசு படையெடுப்பு (1810), சாவகப்படையெடுப்பு (1811), இரண்டாம் ஆங்கில மராட்டியப் போரில் கட்டாக்கின் மீதான தாக்குதல், 1857 சிப்பாய் கலகத்தின் போது லக்னௌ முற்றுகை, மூன்றாம் ஆங்கில பர்மியப் போரின் போது மேல் பர்மா படையெடுப்பு ஆகியவை சென்னைப் படை பங்கேற்ற பிற போர் நிகழ்வுகள்.
1857 சிப்பாய் கலகத்தின் விளைவாக வங்காள மற்றும் மும்பை மாகாணப் படைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் சென்னைப் படையில் அவ்வாறு எதுவும் நிகழவில்லை. 1895 இல் மாகாணப் படைகள் கலைக்கப்பட்டு, சென்னைப் படையின் படைப்பிரிவுகள் பிரித்தானிய இந்தியாவின் முதற்பெரும் படைத்தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன.

நிலம்


சென்னை மாகாணத்தில் “ரயாட்வாரி” நிலவரி முறையை அறிமுகப்படுத்திய சர் தோமஸ் முன்ரோவின் சிலை (சென்னை)
நில வாடகை வருவாய் மற்றும் நிலத்தின் மூலம் அதன் உரிமையாளருக்குக் கிட்டும் நிகர லாபத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்ட வருமான வரி இவை இரண்டுமே சென்னை மாகாணத்தின் முக்கிய வருவாய் மூலங்களாக இருந்தன.
பண்டையக் காலங்களில் நிலம் சமுதாயத்தின் கூட்டுச்சொத்தாக இருந்ததால், எந்த தனிப்பட்ட நபரும் பிற உரிமையாளர்களின் அனுமதியன்றி அதை விற்க முடியாதிருந்தது. ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே தனிமனித சொத்துரிமை என்ற கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. எனவே சென்னை மாகாணத்தின் நில வருவாய் முறை அதற்கு முன்பிருந்த முறையிலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை.ஆனால் நில உரிமையாளர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தின் பிற உறுப்பினர்களின் இசைவு பெற்ற பின்னரே நிலத்தை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இத்தகைய கூட்டுச் சொத்துரிமை முறை வெள்ளாளர்களால்காணியாட்சி என்றும், பார்ப்பனர்களால் சுவஸ்தியம் என்றும், கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியரால் மிராசி என்றும் அழைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருந்த அனைத்து மிராசிகளும் ஒரு தனி நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவர் “ஏகபோகம்” என்றழைக்கப்பட்டார். இந்த மிராசுதார்கள் கிராம நிருவாகத்துக்காக குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். இது ”மிரை” என்றழைக்கப்பட்டது. மேலும் அரசுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலுத்தி வந்தனர். இதற்கு பிரதிபலனாக அரசு கிராமங்களின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று எதிர்பார்த்தனர்.
மலபார் மாவட்டத்திலும் கொச்சி மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானங்களில் இந்தக் கூட்டுச் சொத்துரிமை முறை பின்பற்றப்படவில்லை. மாறாக நம்பூதிரிநாயர் மற்றும் மாப்பிளை சாதிகளைச் சேர்ந்தவர்களே நில உரிமையாளர்களாக இருந்தனர். அவர்கள் அரசுக்கு நில வரி செலுத்தவில்லை. அதற்கு பதிலாக நாயர்கள் போர்க்காலங்களில் அரசனின் படைக்கு ஆட்களை அனுப்பினர், நம்பூதிரிகள் கோயில் பராமரிப்புப் பணிகளைச் செய்தனர். நிலச்சுவான்தார்கள் ஓரளவு தன்னிறைவு பெற்றிருந்ததுடன் தாங்களே சொந்தமாக காவல் மற்றும் நீதித்துறைகளை நடத்தி வந்தனர். இதனால் அரசரின் நிருவாகச் செலவுகள் வெகுவாகக் குறைந்தன. ஆனால் நிலம் விற்கப்பட்டால் இந்த வருமான வரி விலக்கு ரத்தாகி விடும். இதனால் நிலத்தை விற்பதைக் காட்டிலும் அடகு வைப்பதே பரவலாக நடைபெற்றது. தெலுங்கு பேசும் மாவட்டங்களின் ஊர்த்தலைவர்கள் பல ஆண்டுகளுக்குச் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தனர். போர்க்காலத்தில் அரசருக்கு படைகளும் தளவாடங்களும் தந்துதவுவதற்குப் பிரதிபலனாக தங்கள் நில வருவாயை முழுமையாக தாங்களே வைத்துக்கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். பிரித்தானிய ஆட்சிகாலத்தில் சென்னை மாகாணத்தில் வட மாவட்டங்களில் பெரும்பகுதி இத்தகைய குறுநில மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இசுலாமியப் படையெடுப்புகளால் நில உரிமை முறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்து நில உரிமையாளர்களுக்கு வரிகள் உயர்த்தப்பட்டன, நில உரிமை அளவும் குறைந்து போனது.
சென்னை மாகாண நிருவாகம் ஆங்கிலேயரிடம் வந்த போது அவர்கள் நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த நில உடைமை முறையை மாற்றவில்லை. சமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலங்களிலிருந்து வரி வசூல் செய்ய இடைத்தரகர்களை நியமித்தனர். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த இடைத்தரகர்கள் உழவர்களின் நலனைப் பற்றிச் சிந்திக்காமல் அவர்களைக் கூடிய மட்டும் சுரண்டிப் பிழைத்தனர். இந்த சிக்கலைத் தீர்க்க 1786 இல் அமைக்கப்பட்ட வருவாய் வாரியத்தால் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இக்காலகட்டத்தில் வங்காள மாகாணத்தில் கார்ன்வாலிசு பிரபு ஏற்படுத்திய சமீன்தாரி முறை வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. எனவே அது 1799 முதல் சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் வங்காளத்தில் வெற்றி பெற்ற அளவுக்கு அம்முறை சென்னையில் வெற்றி பெறவில்லை.எதிர்பார்த்த அளவுக்கு கிழக்கிந்திய நிறுவனத்துக்கு லாபம் கிட்டாததால், 1804-1814 காலகட்டத்தில் “கிராம முறை” என்ற ஒரு புதிய முறை திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கோயமுத்தூர், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில் நிறுவனம் பெரும் நிலச்சுவான்தார்கள் நிறுவனத்திடமிருந்து நிலத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து அதனைப் பிரித்து குறு விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டனர். ஆனால் இம்முறையும் விரைவில் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக தோமஸ் முன்ரோ ரயாட்வாரி முறையை 1820-27 காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தினார். இம்முறையின் கீழ் உழவர்கள் (ரயாட்டுகள், Ryots) தங்கள் குத்தகைத் தொகையை நேரடியாக அரசுக்குச் செலுத்தினர். அரசே நிலத்தை அளந்து, விளைச்சலைக் கணித்து உழவர்கள் கட்ட வேண்டிய வரியை நிர்ணயித்தது. ஆனால் இம்முறையிலும் உழவர்களுக்குப் பல பாதிப்புகள் இருந்தன. 1833 இல் வில்லியம் பென்டிங்க் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில் நிலச்சுவான்தார்களும் உழவர்களும் செலுத்தவேண்டிய வரி குறித்து அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
1911 வாக்கில், சென்னை மாகாணத்தின் பெருவாரியான நிலப்பகுதி உழவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் அரசுக்கு நேரடியாக வரியைச் செலுத்தினர். மாகாண நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு (26 மில்லியன் ஏக்கர்கள்) சமீன்தார்களிடம் இருந்தது. அரசுக்குச் செலுத்த வேண்டிய நிரந்தர வரி (”பேஷ்காஷ்”) ஆண்டொன்றுக்கு 3,30,000 பவுண்டுகளாக இருந்தது. சமய அமைப்புகளால் கொடையளிக்கப்பட்ட நிலங்களும் அரசு சேவைக்காக வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்களும் “இனாம்”கள் என்றழைக்கப்பட்டன. அவற்றின் மொத்த அளவு: 8 மில்லியன் ஏக்கர்கள். In 1945–46 காலகட்டத்தில், சென்னை மாகாணத்தில் 2,09,45,456 ஏக்கர் சமீன் நிலங்களும் (வரி வருவாய்: ரூ. 97,83,167) 5,89,04,798 ரயாட்வாரி நிலங்களும் (வரி வருவாய்: ரூ. 7,26,65,330) இருந்தன. இவை தவிர மாகாணத்தில் 15,782 சதுர மைல் நிலப்பரப்பு காடுகளாக இருந்தது.
சமீன்களில் உழவர்களைச் சுரண்டலில் இருந்து பாதுகாக்க 1808 நில உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி உழவர்கள் தங்கள் நிலங்களில் நிரந்தரமாகத் தங்க வேண்டும் ஆனால் ஒடியா மொழி பேசும் மாவட்டங்களில், உழவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களது நலனுக்குக் கேடாக அமைந்தது. 1933 இல் இச்சட்டம் திருத்தப்பட்டது. சமீன்தார்களின் உரிமைகள் குறைக்கப்பட்டு உழவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.

வேளாண்மையும் நீர்ப்பாசனமும்


சென்னை மாகாணத்தின் அரிசி கிடங்குகள் வரைபடம் (1936)
சென்னை மாகாண மக்கள் தொகையில் 71 விழுக்காட்டினர் வேளாண் தொழில் செய்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூலை 1ம் தேதி வேளாண் பருவம் தொடங்கியது. அரிசிசோளம்கம்புராகி போன்ற தானியங்களும் கத்திரி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெண்டை, வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளும், மிளகாய்,மிளகுஇஞ்சி போன்ற மசாலாப் பொருட்களும், நெல்லிவாழைபலாமாபப்பாளிசீதா போன்ற பழவகைகளும் பயிரிடப்பட்டன. இவை தவிர ஆமணக்குநிலக்கடலை ஆகியவையும் பயிரிடப்பட்டன. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பிற நிலப்பகுதிகளில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இலைக்கோசு, பூக்கோசு, வெற்றிலை மிளகு, திரட்சை போன்ற பயிர்களும் சென்னை மாகாணத்தில் விளந்தன.மொத்த விளைநிலப்பரப்பில் 80 விழுக்காட்டில் உணவுப் பயிர்களும் 15 விழுக்காட்டில் பணப்பயிர்களும்
 பயிரிடப்பட்டன.அரிசி, கம்பு, ராகி, சோளம் போன்ற பயிர்கள் முறையே 26.4, 10, 5.4, 13.8 விழுக்காடு நிலப்பரப்பில் பயிரிடப்பட்டன.பருத்தி 17,40,000 ஏக்கர் நிலப்பரப்பிலும் எண்ணெய் வித்துகள் 20 லட்சம் ஏக்கரிலும் மசாலாப் பயிர்கள் 4 லட்சம் ஏக்கரிலும் அவுரி இரண்டு லட்சம் ஏக்கரிலும் பயிரிடப்பட்டன. 1898 ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் 2.8 கோடி மக்கள், 2,15,70,000 ஏக்கர் நிலப்பரப்பில் 74.7 கோடி மில்லியன் டன் உணவு தானியங்களை விளைவித்தனர். அரிசி விளைச்சல் ஏக்கருக்கு 7 முதல் 10 cwt. ஆக இருந்தது. சோளம், கம்பு மற்றும் ராகி விளைச்சல்கள் ஏக்கருக்கு முறையே 3.5-6.25, 3.25-5, 4.25-5 cwt. ஆக இருந்தன. உணவுப் பயிர்களுக்கான மொத்த சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 6.93 cwt. ஆக இருந்தது. (1 cwt = 112 பவுண்டுகள்).

முல்லைப்பெரியாறு அணையின்கட்டுமானப்பணிகள் நடைபெறுகின்றன
மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் நீர்ப்பாசனத்துக்காக ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளும், ஏரிகளும், பாசனக் குளங்களும் பயன்படுத்தப்பட்டன. மேற்கில் கோவை மாவட்டத்தில் குளங்களே நீர்ப்பாசனத்துக்குப் பெரிதும் பயன்பட்டன.
1884ம் ஆண்டு இயற்றப்பட்ட நில விருத்தி மற்றும் வேளாண் கடன் சட்டம், கிணறுகள் வெட்டி தரிசு நிலங்களை விளைநிலங்களாக்க நிதி ஒதுக்கீடு செய்தது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மின் ஏற்றிகளைக் கொண்டு நீரிறைக்க ஒரு தனி அரசுத்துறை உருவாக்கப்பட்டது. மேட்டூர் அணைமுல்லைப்பெரியாறு அணை, கடப்பா-கர்நூல் கால்வாய், ருசிகுல்யாத் திட்டம் போன்றவை சென்னை மாகாண அரசு மேற்கொண்ட பெரும் நீர்ப்பாசனத் திட்டங்களில் சில. 1934 இல் கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணை மாகாணத்தின் மேற்கு மாவட்டங்களின் நீர்ப்பாசனத் தேவையைப் பூர்த்தி செய்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லையில் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணைபெரியாறு நீரை வைகை வழியாக தென் மாவட்டங்களுக்குத் திருப்பிவிட்டது. கஞ்சம் மாவட்டத்தில் பாய்ந்த ருசிகுல்யா ஆற்று நீரைப் பயன்படுத்த ருசிகுல்யா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 1,42,000 நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிட்டியது. இவை தவிர பல அணைக்கட்டுகளையும் கால்வாய்களையும் மாகாண அரசு கட்டியது.திருவரங்கம் தீவு அருகே கொள்ளிடத்தின் குறுக்கே ஒரு அணைகோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலேசுவரம் அணை, வைநேத்யம் கோதாவரியில் நீர்க்கட்டுக் கால்வாய், கர்நூல்-கடப்பா கால்வாய், மற்றும் கிருஷ்ணா அணை ஆகியவை மாகாண அரசால் கட்டப்பட்ட பெரும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள்.[125][134][135] 1946–47, காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் 97,36,974 ஏக்கர் நிலம் நீர்ப்பாசன வசதி பெற்றிருந்தது. அரசு நீர்ப்பாசனத்தில் செய்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 6.94% வருவாய் கிட்டியது.

வர்த்தகமும் தொழிற்துறையும்


தூத்துக்குடி துறைமுகம்

எம். வி. கண்ணையா செட்டி அன் சன்ஸ் துணிக்கடை (1914)

கைத்தறி நெசவாளர்கள் (1913)

பாரி அன் கோ சர்க்கரை சுத்திகரிப்பு ஆலை, சமல்கோட்டா (1914)

சென்னை தானுந்து நிறுவனத்தின் பணிமனை (1914)
சென்னை மாகாணத்தில் நடைபெற்ற வர்த்தகத்தில் 93% வெளிவர்த்தகம் (பிற மாநிலங்களுடனும் நாடுகளுடனும்). எஞ்சிய 7 % உள்வர்த்தகம். வெளி வர்த்தகத்தில் 70 % பிற நாடுகளுடனான வர்த்தகம், 23 % பிரித்தானிய இந்தியாவின் பிற மாகாணங்களுடன் நடைபெற்ற வர்த்தகம். 1900–01, இல் பிற மாகாணங்களில் இருந்து ரூ. 13.43 கோடி மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பிற மாகாணங்களுக்கு ரூ. 11.52 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே ஆண்டு பிற நாடுகளுக்கு ரூ 11.74 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன; பிற நாடுகளில் இருந்து ரூ 6.62 கோடி மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.இந்தியா விடுதலை அடைந்த போது மாகாணத்தின் இறக்குமதிகளின் மதிப்பு ரூ 71.32 கோடியாகவும் ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 64.51 கோடியாகவும் இருந்தன. மாகாணத்தின் மொத்த வர்த்தகத்தில் 31.54 % ஐக்கிய இராச்சியத்துடன் நடைபெற்றது. வர்த்தகத்தில் 49% சென்னை நகரின் துறைமுகம் வழியாக நடைபெற்றது.
பருத்தித் துணித்துண்டுகள், நூல், உலோகங்கள், மண்ணெண்ணை ஆகியவை முக்கிய இறக்குமதிப் பொருட்கள். விலங்குத் தோல்கள், பஞ்சு, காபி, துணித்துண்டுகள் ஆகியவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். கடல் வழி வணிகத்தின் பெரும் பகுதி சென்னை நகரத் துறைமுகத்தின் மூலம் நடைபெற்றது. கோபால்பூர், காளிங்கப்பட்டனம், பீம்லிபட்டனம், கிழக்குக் கடற்கரையில் விசாகப்பட்டனம், மச்சிலிப்பட்டினம், காக்கிநாடா, கடலூர், பாம்பன், தூத்துக்குடி ஆகியனவும் மேற்குக் கடற்கரையில் மங்களூர், கண்ணனூர், கோழிக்கோடு, தளிச்சேரி, கொச்சி, ஆலப்புழா, கொல்லம், குளச்சல் ஆகியனவும் சென்னை மாகாணத்தின் பிற முக்கிய துறைமுகங்களாக இருந்தன. ஆகஸ்ட் 1, 1936 முதல் இந்திய அரசே கொச்சித் துறைமுகத்தின் நிருவாகத்தை ஏற்று நடத்தத் தொடங்கியது. அது போல் ஏப்ரல் 1, 1937 முதல் சென்னைத் துறைமுகமும் அரசுக் கட்டுப்பாட்டில் வந்தது. சென்னை, கொச்சி மற்றும் காக்கிநாடாவில் வர்த்தகர் சங்கங்கள் இயங்கி வந்தன. இவை சென்னை சட்டமன்றத்துக்கு தலா ஒரு நியமன உறுப்பினரைப் பரிந்துரை செய்யும் உரிமையும் பெற்றிருந்தன.
பருத்திக் கொட்டை நீக்குதலும், நெய்தலும் சென்னை மாகாணத்தின் இரு முக்கிய தொழில்கள். பெல்லாரி மாவட்டத்தில் அதிக அளவில் விளைந்த பருத்தி சென்னை, ஜார்ஜ் டவுன் பகுதியில் அழுத்தப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போர் காரணமாக இங்கிலாந்து, லங்கசயரில் பருத்தித் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்ப்பற்றாக்குறையை ஈடு செய்ய சென்னை மாகாணமெங்கும் பருத்தி பயிரிடலும் பருத்தி அழுத்திகளை இயக்குவதும் ஊக்குவிக்கப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கோயமுத்தூர் பகுதி பருத்தி சார் தொழில்களின் முக்கிய மையமாகியது; ”தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்ற பட்டத்தையும் பெற்றது. கோதாவரி, விசாகப்பட்டனம், கிருஷ்ணா போன்ற வட மாவட்டங்களிலும் பருத்தி நெய்தல் பெருமளவில் நடைபெற்றது. கஞ்சாம் மாவட்டத்தில் அஸ்கா என்னுமிடத்திலும் தென்னாற்காடு மாவட்டத்தில் நெல்லிக்குப்பத்திலும் சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்தன.தெலுங்கு பேசும் வட மாவட்டங்களில் பெருமளவில் விளைந்த புகையிலையில் இருந்து சுருட்டுகள்தயாரிக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி, சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகியவை முக்கிய சுருட்டு தயாரிப்பு தொழில் மையங்கள். செயற்கை அனிலீன் மற்றும் அலிசாரீன் சாயங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, சென்னை மாகாணத்தில் இயற்கைச் (காய்கறி) சாயத் தொழில்துறை நன்கு இயங்கி வந்தது. அலுமினியக் கலன்கள் செய்வதற்காகப் பெருமளவில் அலுமினியம் இறக்குமதி செய்யப்பட்டது. உயர்ரகத் தோல்பொருட்களை உற்பத்தி செய்ய 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஒரு குரோம் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையை அரசு நிறுவியது. 1826ம் ஆண்டு மாகாணத்தின் முதல் மது வடிப்பாலை நீலகிரியில் தொடங்கப்பட்டது; வயநாடு, குடகு, மைசூர்ப் பகுதிகளில் காப்பி பயிரிடப்பட்டது. நீலகிரி மலைத்தொடர்ப் பகுதிகளில் டீ பயிரிடப்பட்டது. திருவிதாங்கூரிலும் காப்பித் தோட்டங்கள் இருந்தன. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட ஒரு கருகல் நோய்த் தாக்குதலால் அவை அழிந்து போயின. காப்பி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கோழிக்கோடு, தளிச்சேரி, மங்களூர், கோயமுத்தூர் போன்ற இடங்களில் அமைந்திருந்தன. 1947 இல், சென்னை மாகாணத்தில் மொத்தம் 3,761 ஆலைகளும் 2,76,586 தொழிலாளர்களும் இருந்தனர்.
சென்னை மாகாணத்தின் மீன்பிடித் தொழில்கள் வெற்றிகரமாக இயங்கின. மீன்பிடி தவிர, சுறா துடுப்புகள், மீன் குடல்கள், மீன்கள் போன்றவற்றை பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் மீனவர்களின் முக்கிய வருவாய் மூலங்களாக இருந்தன. தூத்துக்குடித் துறைமுகம் சங்கு பிடி தொழிலின் முக்கிய மையமாக இருந்தது. சென்னையும், இலங்கையும் முத்துக் குளித்தலுக்கு பெயர் பெற்றிருந்தன.
1946-47 இல் சென்னை மாகாணத்தின் மொத்த வருவாய் ரூ. 57 கோடிகள். இதில் நிலவருவாய், சுங்கத் தீர்வை, வருமான வரி, பதிவு வரி, காடுகளில் இருந்து கிட்டிய வருவாய், இதர வரிகள், திட்டமிடாத வருவாய் மற்றும் வருவாய் நிதி ஆகியவை முறையே 8.53, 14.68, 4.48, 4.38, 1.61, 8.45, 2.36 மற்றும் 5.02 கோடி ரூபாய்களாக இருந்தன. 1946–47 ஆண்டுகளில் மொத்த செலவு ரூ. 56.99 கோடிகள். 1948 இல் 208,675 கிலோவாட் அம்பியர் மின்சாரம் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. இதில் 98% அரசு உடைமையாக இருந்தது. மொத்தம் 467 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
1920 ம் ஆண்டு சென்னை நகரில் 100 உறுப்பினர்களுடன் சென்னைப் பங்குச் சந்தை தொடங்கப்பட்டது. ஆனால் வேகமாக உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து 1923 இல் மூன்று பேர் மட்டுமே எஞ்சியிருந்ததால் அது மூடப்பட்டது. செப்டம்பர் 1937 இல் மீண்டும் தொடங்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஈஐடி பாரிபின்னி அன் கோஅர்புத்னாட் வங்கி ஆகியவை சென்னை மாகாணத்தின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களாக இருந்தன. பாரி நிறுவனம் வேதி உரப்பொருட்களும் சர்க்கரையும் உற்பத்தி செய்தது. பின்னி நிறுவனம் பருத்தி ஆடைகளையும் சீருடைகளையும்ஒட்டேரியில் உள்ள தனது பக்கிங்காம் கர்னாடிக் நூற்பு ஆலையில் உற்பத்தி செய்தது. 1913–14 காலகட்டத்தில் சென்னை நகரில் 247 வணிக நிறுவனங்கள் இருந்தன. இந்திய விடுதலையின் போது பதிவுசெய்யப்பட்ட ஆலைகள் சென்னை நகரில் பெருமளவு இருந்தாலும் மொத்த முதலீட்டில் 62 விழுக்காட்டை மட்டுமே பயன்படுத்தின.
ஜூன் 21, 1683 இல் அமைக்கப்பட்ட சென்னை வங்கியே சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்ட முதல் மேற்கத்திய பாணி வங்கி. அதன் மொத்த முதலீடு ஒரு லட்சம் பிரித்தானியப் பவுண்டுகள். அதனைத் தொடர்ந்து 1788 இல் கர்நாடக வங்கியும் 1795 இல் சென்னையின் வங்கியும் 1804 இல் ஆசிய வங்கியும் தொடங்கப்பட்டன. 1843 இல் இந்த வங்கிகள் அனைத்தும் சென்னையின் வங்கி என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டன.மாகாணத்தின் முக்கிய நகரங்களிலும் மன்னர் அரசுகளிலும் இவ்வங்கிக்குக் கிளைகள் இருந்தன. 1921இல் இவ்வங்கி மும்பையின் வங்கி மற்றும் வங்காளத்தின் வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்டு இந்தியாவின் வேந்திய வங்கி (Imperial Bank of India) உருவாக்கப்பட்டது. 1906 ம் ஆண்டு வரை அர்புத்னாட் குடும்பத்தாரின் அர்புத்னாட் வங்கியே சென்னை மாகாணத்தின் மிகப்பெரிய வங்கியாக இருந்தது. 1906 இல் அது திவாலானது. இதனால் தங்கள் முதலீடுகளை இழந்து வறுமையில் தள்ளப்பட்ட இவ்வங்கியின் இந்திய முதலீட்டாளர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியினர் உதவியுடன் இந்தியன் வங்கியை உருவாக்கினர். சிட்டி யூனியன் வங்கிகனரா வங்கிகார்ப்பரேசன் வங்கிதமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிகரூர் வைசியா வங்கிகத்தோலிக்க சிரிய வங்கிகர்நாடகா வங்கிசெட்டிநாடு வங்கி, ஆந்திரா வங்கி,வைசியா வங்கிவிஜயா வங்கிஇந்திய ஓவர்சீஸ் வங்கி மதுரா வங்கி போன்றவை சென்னை மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட வங்கிகளுள் முக்கியமானவை.

போக்குவரத்து


சென்னை மற்றும் தெற்கு மராத்தா தொடருந்து நிறுவனத்தின் இருப்புப்பாதை வரைபடம்
கிழக்கிந்திய நிறுவனத்தின் தொடக்க நாட்களில் பல்லக்குகளும், “ஜட்கா” என்று அழைக்கப்பட்ட மாட்டு வண்டிகளும் மட்டும் மாகாணத்தில் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. மாகாணத்தில் சாலைகள் உருவாக்குவதில் திப்பு சுல்தான் ஒரு முன்னோடியாகக் கருதப்பட்டார். அக்காலத்தில் இருந்த சென்னை-கல்கத்தா சாலை, சென்னை-திருவிதாங்கூர் சாலைகளின் முக்கிய நோக்கு மக்கள் போக்குவரத்தல்ல. போர்க்காலத்தில் படைகளையும் தளவாடங்களையும் விரைவாக நகர்த்துவதற்கு அவை பயன்பட்டன. 20 ஆம் நூற்றாண்டு முதல் மிதிவண்டிகள், தானுந்து வாகனங்கள், பேருந்துகள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்தது. பெரும்பாலான பேருந்துகள் தனியாரால் இயக்கப்பட்டன.மாகாணப் போக்குவரத்து (Presidency Transport), நகர மோட்டார் சேவைகள் (City Motor Service) ஆகிய நிறுவனங்கள் பேருந்துகள் இயக்கத்தில் முன்னோடிகளாக இருந்தன. 1910ம் ஆண்டு முதல் அவை சிம்சன் அன் கோ உற்பத்தி செய்த பேருந்துகளை இயக்கி வந்தன. 1925-28 காலகட்டத்தில் சென்னை டிராம்வேஸ் நிறுவனம் இயக்கிய பேருந்து சேவையே சென்னை நகரின் முதல் ஒருங்கிணைந்த பேருந்து சேவையாகும். மோட்டார் வாகனச் சட்டம், 1939 பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டப் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்குப் பல புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

நீலகிரி மலைத் தொடருந்து.

மலபார் மாவட்ட நீர்வழிகள் (1913)
மாகாணத்தில் புதிய சாலைகள் போடவும், பழைய சாலைகளைப் பரமாரிக்கவும் 1845 இல் முதல் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சாலை பராமரிப்புக்கென ஒரு தனி அதிகாரி நியமிக்கப்பட்டார்.சென்னை-பெங்களூர் சாலை, சென்னை-திருச்சிராப்பள்ளி சாலை, சென்னை-கல்கத்தா சாலை, சென்னை-கடப்பா சாலை, சும்பாஜீ மலைச் சாலை போன்றவை அவரது மேற்பார்வையின் கீழிருந்தன. 1852 இல் தல்ஹவுசிப் பிரபு பொதுப் பணிகளுக்கென ஒரு தனித்துறையை உருவக்கினார். 1855 இல் போக்குவரத்து வசதிக்காகக் கிழக்குக் கடற்கரைக் கால்வாய் கட்டப்பட்டது. ஆளுனரின் பொதுப்பணிகளுக்கான நிருவாகக் குழு உறுப்பினரின் மேற்பார்வையில் செயல்பட்ட பொதுப்பணித்துறை செயலகம் சாலைப் பணிகளை மேற்கொண்டது. சென்னை-கல்கத்தா சாலை, சென்னை-திருவிதாங்கூர் சாலை, சென்னை-கோழிக்கோடு சாலை ஆகியவை சென்னை மாகாணத்தின் முக்கியநெடுஞ்சாலைகளாக இருந்தன. 1946–47 இல் சென்னை மாகாணத்தில் 26,201 மைல் சரளைக் கல் சாலைகளும், 14,406 கல்பதிக்காத சாலைகளும், 1,403 மைல் படகுப் போக்குவரத்துக்கு உகந்த கால்வாய்களும் இருந்தன.
தென்னிந்தியாவின் முதல் தொடருந்து இருப்புப் பாதை சென்னைக்கும் ஆற்காட்டுக்கும் இடையே அமைக்கப்பட்டு, ஜூலை 1, 1856 இல் தொடருந்துப் போக்குவரத்து தொடங்கியது. 1845 இல் நிறுவப்பட்ட சென்னை தொடருந்து நிறுவனத்தால் இந்தப் பாதை உருவாக்கப்பட்டது. 1853 இல் தென்னிந்தியாவின் முதல் தொடருந்து நிலையம் ராயபுரத்தில் அமைக்கப்பட்டது; சென்னை தொடருந்து நிறுவனத்தின் தலைமையகவாகவும் செயல்பட்டது. 1853 இல் ஐக்கிய இராச்சியத்தில் பெரும் தென்னிந்தியத் தொடருந்து நிறுவனம் நிறுவப்பட்டது. திருச்சியைத் தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம் திருச்சிக்கும் நாகப்பட்டனத்துக்கும் இடையே தனது முதல் இருப்புப் பாதையை 1859 இல் உருவாக்கியது. சென்னைத் தொடருந்து நிறுவனம் அகல இருப்புப் பாதைகளையும் பெரும் தென்னிந்தியத் தொடருந்து நிறுவனம் மீட்டர் இருப்புப் பாதைகளையும் அமைத்தன. 1874 இல் பெரும் தென்னிந்தியத் தொடருந்து நிறுவனம் கர்நாடக தொடருந்து நிறுவனத்துடன் (நிறுவல் 1864) ஒன்றிணைக்கப்பட்டு, தென்னிந்தியத் தொடருந்து நிறுவனம் உருவானது. இப்புதிய நிறுவனம் 1891 இல் பாண்டிச்சேரி தொடருந்து நிறுவனத்துடன் இணைந்தது. 1908 இல் சென்னைத் தொடருந்து நிறுவனம் தெற்கு மராத்தா தொடருந்து நிறுவனத்துடன் இணைந்து சென்னை மற்றும் தெற்கு மராத்தா தொடருந்து நிறுவனம் உருவானது. இப்புதிய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக சென்னை எழும்பூரில் ஒரு புதிய முனையம் கட்டப்பட்டது. 1927 இல் தென்னிந்தியத் தொடருந்து நிறுவனத்தின் தலைமையகம் மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நகர்த்தப்பட்டது. 1931 இல் இந்நிறுவனம் சென்னை புறநகர் இருப்புவழி சேவையைத் தொடங்கியது. ஏப்ரல் 1944 இல் சென்னை மற்றும் தெற்கு மராத்தா தொடருந்து நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்டது. 1947 இல் சென்னை மாகாணத்தில் 4961 மைல் தொடருந்து இருப்புப் பாதைகள் இருந்தன. சென்னை நகர், மும்பை, கல்கத்தா போன்ற பிற இந்திய நகரங்களுடனும், இலங்கையுடனும் நன்கு இணைக்கப்பட்டிருந்தது.. 1914 இல் இந்தியப் பெருநிலப்பரப்பைப்பாம்பன் தீவுடன் இணைக்கும் பாம்பன் பாலம் திறக்கப்பட்டது. 1899 இல் மேட்டுப்பாளையம்-உதகமண்டலம் இடையேயான நீலகிரி மலை இரயில் பாதை செயல்படத் தொடங்கியது. அட்சிசன் அன் கோவின் ஆதரவில் இயங்கிய சென்னை டிராம்வேஸ் நிறுவனம் 1895 முதல் சென்னை நகரில் செயல்படத் தொடங்கியது. சென்னை நகரின் ஆறு தூரமான பகுதிகள் இடையே மொத்தம் 17 மைல் தூரம் டிராம் வண்டிகள் இயங்கின. 1953 இல் சென்னை டிராம் சேவை நிறுத்தப்பட்டது.
கோதாவரி மற்றும் கிருஷ்ணா வடிநிலப்பகுதிகளில் இருந்த கால்வாய்களே சென்னை மாகாணத்தின் படகுப் போக்குவரத்துக்கு உகந்த முக்கிய நீர்வழிகளாக இருந்தன. 1806ம் ஆண்டு 90 லட்ச வெள்ளி செலவில் பக்கிங்காம் கால்வாய் வெட்டப்பட்டது. இது சென்னை நகரை கிருஷ்ணா வடிநிலப்பகுதியில் உள்ள பெட்டகஞ்சத்துடன் இணைத்தது. பிரித்தானிய இந்தியாவின் நீராவிக் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் கப்பல்கள் சென்னைக்கு அடிக்கடி வருகை தந்தன. சென்னை நகரை மும்பை, கல்கத்தா, கொழும்பு, ரங்கூன் போன்ற நகரங்களுடன் இணைத்தன.
1917 இல் சிம்சன் அன் கோ சென்னையில் முதல் சோதனை வானூர்தி ஓட்டத்தை நிகழ்த்தியது. அக்டோபர் 1929 இல் ஜி. விளாஸ்டோ என்ற விமானி சென்னைப் பரங்கிமலை குழிப்பந்தாட்ட சங்க மைதானத்தில் ஒரு பறப்போர் சங்கத்தைத் தொடங்கினார். இவ்விடம் பின்பு சென்னை வானூர்தி நிலையமாகப் பயன்பட்டது. இச்சங்கத்தின் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவரான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தனது சொந்த ஊர்ப்புறமான செட்டிநாட்டுப் பகுதியில் மற்றுமொரு விமான நிலையத்தை உருவாக்கினார். அக்டோபர் 15, 1932 இல் நெவில் வின்சண்ட் என்கிறவேந்திய வான்படை விமானி ஜே. ஆர். டி. டாட்டாவுக்கு சொந்தமான ஒரு விமானத்தில் வான் அஞ்சல் கடிதங்களை ஏற்றிக் கொண்டு மும்பையிலிருந்து பெல்லாரி வழியாக சென்னையில் வந்திறங்கினார். இதுவே டாட்டா வான்சேவை நிறுவனத்தின் கராச்சி-சென்னை பயணிகள் மற்றும் வான் அஞ்சல் சேவையின் தொடக்கமாக அமைந்தது. பின்னர் ஐதராபாத் வழியாகத் திருப்பிவிடப்பட்ட இச்சேவை வாரம் இருமுறையாக விரிவுபடுத்தப்பட்டது. நவம்பர் 26, 1935, இல் டாட்டா சன்ஸ் நிறுவனம் கோவா, கண்ணனூர் வழியாக மும்பை-திருவனந்தபுரம் வான்சேவை ஒன்றை சோதனை அடிப்படையில் தொடங்கியது. பெப்ரவரி 28, 1938 முதல் சென்னை, திருச்சிராப்பள்ளி வழியாக கராச்சி-கொழும்பு இடையே ஒரு வான் அஞ்சல் சேவையொன்றையும் புதிதாகத் தொடங்கியது. மார்ச் 2, 1938 இல் மும்பை-திருவனந்தபுரம் வான்சேவை திருச்சி வரை நீட்டிக்கப்பட்டது.
சென்னை மாகாணத்தில் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அஞ்சல் சேவை சென்னை-கல்கத்தா இடையே 1712 ஆம் ஆண்டு சென்னை ஆளுனர் எட்வர்ட் ஹாரிசனால் தொடங்கப்பட்டது. ஜூன் 1, 1786 இல் இச்சேவை மறுசீரமைக்கப்பட்டு சர் ஆர்ச்சிபால்டு கேம்பலால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி சென்னை மாகாணம் மூன்று அஞ்சல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது - 1) சென்னை நகரின் வடக்கே கஞ்சாம் வரை சென்னை வடக்கு, 2) தென்மேற்கில் திருவிதாங்கூர் வரை சென்னை தென்மேற்கு மற்றும் 3) மேற்கே வேலூர் வரை சென்னை மேற்கு. அதே ஆண்டு மும்பையுடன் ஒரு அஞ்சல் தொடர்பும் ஏற்படுத்தப்பட்டது. 1837 ஆம் ஆண்டு சென்னை, மும்பை மற்றும் வங்காள மாகாணங்களின் அஞ்சல் துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு அனைத்திந்திய அஞ்சல் துறை உருவாக்கப்பட்டது. அக்டோபர் 1, 1854 இல் வேந்திய அஞ்சல் சேவை முதல் அஞ்சல் தலைகளை வெளியிட்டது. 1872–73, இல் சென்னை-ரங்கூன் இடையே ஒரு மாதமிருமுறை கடல் அஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னைக்கும் பிற கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கும் இடையே அஞ்சல் சேவைகள் தொடங்கப்பட்டன.

தொலைதொடர்பு

1853 இல் சென்னை உலகின் பிற பகுதிகளுடன் தந்தி மூலம் இணைக்கப்பட்டது. பெப்ரவரி 1, 1855 இல் பொதுமக்களுக்கான தந்திச் சேவை தொடங்கப்பட்டது. வெகு விரைவில் சென்னை, உதகமண்டலம் ஆகிய ஊர்களுக்கும் இந்தியாவின் பிற ஊர்களுக்குமிடையே தந்தி இணைப்புகள் உருவாக்கப்பட்டன. 1854 இல் சென்னைத் தந்தித்துறை உருவாக்கப்பட்டது. கொழும்பு-தலைமன்னார் இடையே 1858 இல் உருவாக்கப்பட்ட தந்தி இணைப்புத் 1882 இல் சென்னை வரை விரிவாக்கப்பட்டது. 1881 இல் சென்னை மாகாணத்தில் தொலைபேசிச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. நவம்பர் 19, 1981 இல் சென்னை எர்ரபாலு தெருவில் தொலைபேசி இணைப்பகம் ஒன்று உருவாக்கப்பட்டது. 1920 இல் சென்னை-போர்ட் பிளையர் இடையே கம்பியில்லாத் தந்திச் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 1936 இல் சென்னை ரங்கூன் இடையே வானொலி தொலைபேசிச் சேவை தொடங்கப்பட்டது.

கல்வி


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதி
மேற்கத்திய வகைக் கல்வியளிக்கும் பள்ளிகள் 18ம் நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டன. 1822 இல் சர் தாமசு முன்ரோவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு பொதுக்கல்வி வாரியம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இந்திய மொழிகளில் கல்வி கற்பிக்கும் பள்ளிகள் தொடங்கப்பட்டன. முன்ரோவின் திட்டப்படி சென்னையில் ஒரு மையப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியடைந்ததால் 1836 இல் கல்விக் கொள்கை மாற்றப்பட்டது. மீண்டும் ஐரோப்பிய இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகியவற்றுக்கு கல்வியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. பொதுக் கல்வி வாரியத்திற்கு பதில் இந்தியர் கல்விக்கான குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜனவரி 1840 இல், எல்லன்பரோ பிரபு அரச பிரதிநிதியாக இருந்த போது ஒரு பல்கலைக்கழக வாரியம் உருவாக்கப்பட்டது. அலெக்சாந்தர் அர்புத்நாட் பொதுக்கல்வித்துறையின் இணை இயக்குனராகப் பதவியேற்றார். ஏப்ரல் 1841 இல் சென்னை மையப் பள்ளி, உயர்நிலைப்பள்ளியாகத் தரமுயர்த்தப்பட்டது. 1853 இல் ஒரு கல்லூரிப் பிரிவு உருவாக்கப்பட்ட பின்னர் சென்னை மாநிலக் கல்லூரி என பெயர்மாற்றம் பெற்றது. செப்டம்பர் 5, 1857 இல் லண்டன் பல்கலைக்கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகம் என்ற தேர்வு அமைப்பு உருவாக்கப்பட்டது. பெப்ரவரி 1858 இல் முதல் கல்லூரித் தேர்வுகள் நடைபெற்றன.இலங்கையைச் சேர்ந்த சி. வை. தாமோதரம்பிள்ளையும் கரோல் வி. விசுவநாத பிள்ளையும் சென்னைப் பல்கலைகழகத்தி,ல் தேர்ச்சி பெற்ற முதல் பட்டதாரிகளாவர். சர் எஸ். சுப்ரமணிய ஐயர் இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியராவார்.
சென்னை நகருக்கு வெளியே தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியும் ஒன்று. 1794 இல் சென்னை மாகாணத்தின் முதல் பொறியியல் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு நில அளவையாளர் பள்ளியாக இருந்த இது 1861 இல் கட்டுமானப் பொறியியல் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. 1827 இல் சென்னை மாகாணத்தின் முதல் மருத்தவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1856 இல் சைதாபேட்டையில் அரசு ஆசிரியர் பள்ளி தொடங்கப்பட்டது. 1925 இல் ஆந்திரப் பல்கலைக்கழகச் சட்டம் இயற்றப்பட்டதன் விளைவாக ஆந்திரா பல்கலைக்கழகம் உருவானது. 1937ல் இல் திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 1842 இல் சென்னை மாகாணத்தின் முதல் இந்து தனியார் கல்வி நிறுவனமான பச்சையப்பன் கல்லூரி தொடங்கப்பட்டது. 1929 இல் செட்டிநாட்டில் அண்ணாமலை செட்டியார் தொடங்கிய அண்ணாமலை பல்கலைக்கழகம் மாகாணத்தில் மாணவர் தங்குவிடுதி வசதி கொண்ட முதல் கல்வி நிறுவனமாக அமைந்தது. சென்னை மாகாணத்தில் கல்விப்பணி செய்வதில் கிறித்தவ மிசனரிகள் முன்னோடிகளாக இருந்தனர். சென்னை கிருத்துவக் கல்லூரி, மங்களூர் புனித அலோசியசு கல்லூரி, சென்னை லயோலாக் கல்லூரி, தஞ்சை புனித பீட்டல் கல்லூரி ஆகியவை கிறித்தவ மிசனரிகள் தொடங்கிய கல்வி நிறுவனங்களுள் சில.
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில் சென்னையில் தான் படிப்பறிவு விகிதம் மிக அதிகமாக இருந்தது. 1901 இல் சென்னை மாகாணத்தின் 11.9 % ஆண்களும் 0.9 % பெண்களும் படிப்பறிவு பெற்றிருந்தனர். 1950 இல் (சென்னை மாகாணம், சென்னை மாநிலமாக மாறிய போது) அதன் படிப்பறிவு விகிதம் 18 % ஆக இருந்தது. இது இந்திய தேசிய சராசரியை விட சற்று அதிகம். 1901 இல் மாகாணத்தில் மொத்தம் 26,771 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தன. அவற்றில் 784,621 ஆண்களும் 139,139 பெண்களும் (மொத்தம் 923,760 பேர்) படித்தனர். 1947 இல் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 37,811 ஆக உயர்ந்திருந்தது; மொத்த மாணாக்கர் எண்ணிக்கையும் 3,989,686 ஆக அதிகரித்திருந்தது. கல்லூரிகளைத் தவிர ஆண்களுக்காக 31,975 அரசு தொடக்கப்பள்ளிகளும், 720 இடைநிலைப்பள்ளிகளும் பெண்களுக்காக 4,173 தொடக்கப்பள்ளிகளும் 181 இடைநிலைப்பள்ளிகளும் இருந்தன. தொடக்ககாலத்தில் படித்துப் பட்டம் பெறுவோரில் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்களாக இருந்தனர்.கல்வி நிறுவனங்களிலும் அரசு நிருவாகப் பணிகளிலும் பார்ப்பனர்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தியது சென்னை மாகாணத்தில் பிராமண எதிர்ப்பு இயக்கம் உருவாக முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். மேலும் பிரித்தானிய இந்தியாவில் சாதி வாரி இடஒதுக்கீடு முதன் முதலாக சென்னை மாகாணத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

பண்பாடும் சமூகமும்

சென்னை மாகாணத்தில் வாழ்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் இந்தியக் கிறித்தவர்களும் கூட்டுக் குடும்ப முறையைப் பின்பற்றினர்.மாகாணத்தில் தந்தை வழிக் குடும்பமுறை பரவலாகப் பின்பற்றப்பட்டது; குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினரே குடும்பத்தலைவராக இருந்தார். மலபார் மாவட்டம், கொச்சி-திருவிதாங்கூர் மன்னர் அரசுகளில் மட்டும் மருமக்கதாயம் என்னும் தாய்வழி முறை பின்பற்றப்பட்டது. பெண்கள் வீட்டு வேலைகளிலும் குடும்பப் பராமரிப்பிலும் மட்டும் ஈடுபட்டு வந்தனர். உயர்சாதி இந்துப் பெண்களும் முஸ்லிம் பெண்களும் பர்தா அணியும் பழக்கம் கொண்டிருந்தனர். பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளில் தங்கள் தாயாருக்குத் துணையாக இருந்தனர்.திருமணத்துக்குப் பின்னர் கணவன் வீட்டுக்கு இடம்பெயர்ந்து, அவனுக்கும் அவனது வயது முதிர்ந்த குடும்பத்தாருக்கும் பணிவிடை செய்தனர்.மருமகள்கள் கணவன் குடும்பத்தினரால் கொடுமைப் படுத்தப்பட்ட பல சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிராமண விதவைகள் தங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் மேலும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
கிராமங்களில் பல சாதிகளைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்தனர். பார்ப்பனர்கள் அக்கிரகாரங்கள் என்றழைக்கப்பட்ட தனித் தெருக்களில் வாழ்ந்தனர். தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டவர்கள் கிராம எல்லைக்கு வெளியே சேரிக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். அவர்கள் கிராம எல்லைக்குள் வாழ்வதும் கோயில்களுக்குள் நுழைவதும், உயர் சாதி இந்துக்களுக்கு அருகே செல்வதும் தடை செய்யப்பட்டிருந்தது.
19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்து சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1896 மலபார் திருமணச் சட்டம், சம்மந்த முறை திருமணங்களுக்கு சட்டஏற்பு அளித்தது. 1933 இல் இயற்றப்பட்ட மருமக்கதாயம் சட்டம் மருமக்கதாயம் முறையை ஒழித்தது. தலித்த்துகளின்வாழ்வை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1933 இல் இயற்றப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான சட்டம், கோயில் நிருவாகத்தில் தலித்துகளுக்கு இடமளித்தது. 1939 இல் சென்னை மாகாணத்திலும் 1936 இல் திருவிதாங்கூர் அரசிலும் தலித்துகளுக்கு கோயில் நுழைவு உரிமை அளிக்க சட்டங்கள் இயற்றப்பட்டன. 1872 இல் டி. முத்துசாமி ஐயர் விதவை மறுமண சங்கத்தை உருவாக்கி, பிராமண விதவைகளின் மறுமணத்துக்காகப் பாடுபட்டார். கோதாவரி மாவட்டத்தில் கந்துகுரி வீரசலிங்கம் விதவை மறுமண இயக்கத்தை முன்னின்று நடத்தினர். 1947 இல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. பெரும்பாலான சமூக சீர்திருத்தவாதிகள் இந்திய தேசியவாதிகளாகவும் இருந்தனர்.
சேவல் சண்டைஏறு தழுவல், கிராமத் திருவிழாக்கள், நாடகங்கள் போன்றவை கிராமப்புற மக்களால் விரும்பப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளாக இருந்தன. நகரவாசிகள் பொழுதுபோக்கு மன்றங்கள், இசைக் கச்சேரிகள், நாடகங்கள் போன்றவற்றை நாடினர். மேல் மற்றும் மேல் நடுத்தரத் தட்டு மக்கள் கருநாடக இசையையும் பரதநாட்டியத்தையும் விரும்பினர். பிரித்தானியர் அறிமுகப்படுத்திய விளையாட்டுகளில் கிரிக்கெட்டென்னிஸ்,கால்பந்துஹாக்கி போன்றவை பிரபலமாகின. ஆண்டுதோறும் பொங்கல் அன்று இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையே சென்னை மாகாணப் போட்டி என்றழைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது.
சென்னை மாகாணத்தின் முதல் செய்தித்தாளான மெட்ராஸ் கொரியர் 1785 இல் தொடங்கப்பட்டது. 1844 இல் விடுதலைப் போராட்ட வீரர் கசுலு லட்சுமி நரசு செட்டியால் தொடங்கப்பட்ட தி மெட்ராஸ் கிரசெண்ட் இந்தியர் ஒருவரால் நடத்தப்பட்ட முதல் ஆங்கில நாளிதழ். 1948 இல் மொத்தம் 841 இதழ்கள் சென்னை மாகாணத்தில் வெளியாகின.1938 இல் ஆல் இந்தியா ரேடியோ சென்னையில் ஒரு வானொலி நிலையத்தைத் தொடங்கி வானொலி ஒலிபரப்புச் சேவையை அறிமுகப்படுத்தியது. 1930 களில் திரைப்படங்கள் மக்களிடையே பிரபலமாகின. சென்னை, கோவை, சேலம், காரைக்குடி ஆகிய ஊர்களில் திரைப்பட ஸ்டுடியோக்கள் தொடங்கப்பட்டன. 1940-களிலிருந்து சென்னை மாகாணத்தின் திரைப்படத் தலைநகராக உருவெடுத்தது.

பரவலர் ஊடகங்களில்

சென்னை மாகாணத்தின் தலைநகரான மதராசப்பட்டினத்தை பின்புலமாகக் கொண்டே மதராசபட்டினம் என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் 1945-1947ல் இருந்த சென்னை மாகாணம், அப்போது நடந்த அரசியல் சம்பவங்கள் போன்றவை படமாக்கப்பட்டிருந்தன.           
     கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



                                      நன்றி:  விகடன்   ஈ - மாகஸின்                                                  



நன்றி: சந்திரன் வீராசாமி. 


சென்னை மாகாணத்தின் முதல் தேர்தல்

சென்னையில் - சென்னையைத் தலைநகரமாகக் கொண்ட தமிழ்நாட்டிலும்தான் - 2014 மக்களவைப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு சுமுகமாக நடந்துமுடிந்துவிட்டது. இனி, மே 16-ம் தேதிதான் தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவும் தெரியும். அதுவரை கடந்தகால நினைவுகளைச் சற்றே அசைபோடுவோம்.
மதராஸிகளின் முதல் ஓட்டு
1937-ல்தான் முதல் முறையாகப் பெருமளவில், மக்கள் பங்கேற்ற பொதுத் தேர்தல் நடந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா காலனியாக இருந்த அந்தக் காலத்தில் எல்லா மாகாணங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டது. வயது வந்தோருக்கான வாக்குரிமை திட்டத்தின்கீழ் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 25% ஆக இருந்த 3.5 கோடிப் பேர் வாக்களிக்க உரிமை பெற்றிருந்தார்கள். அப்போதுதான் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த சென்னை மாகாண சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடந்தது.
ஆந்திரத்திலிருந்து கன்னியாகுமரி வரையில் அன்றைய சென்னை மாகாணம் விரிந்து பரவியிருந்தது. கர்நாடகத்தின் ஒரு பகுதியும், கேரளத்தின் ஒரு பகுதியும் அன்றைய சென்னை மாகாணத்தில் இணைந்திருந்தன. முதல்முறையாக காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டதால், மக்களிடையே உற்சாகம் அதிகமாக இருந்தது.
முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், வழக்கறிஞரும், நாடகக் கதாசிரியரும், இசைப் புரவலருமான எஸ். சத்தியமூர்த்திதான் பிரச்சாரத்துக் குத் தலைமை வகித்தார். அவரைத் தீரர் என்றே அழைப்பார்கள். சத்தியமூர்த்தியின் தலைமையின் கீழ் அன்றைய காங்கிரஸ் பிரச்சாரம் மக்களை மிகவும் கவர்ந்தது.
1931 முதலே தன்னுடைய பொதுக்கூட்டங்களுக்கு நாடகக் கலைஞர்களை சத்தியமூர்த்தி பயன்படுத்திவந்தார். 1937-ல் அவர்களைப் பிரச்சாரக் களத்தில் அதிக எண்ணிக்கையில் இறக்கிவிட்டார். கே.பி. சுந்தராம்பாள், அவ்வை டி.கே. சண்முகம் அவர்களில் முக்கியமானவர்கள்.
அந்தக் காலத்தில் சின்னம் இல்லை!
அப்போதெல்லாம் தேர்தலில் சின்னங்களைப் பயன்படுத் தும் நடைமுறை வரவில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் வாக்குப்பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கும். வாக்காளர் வாக்குச் சீட்டை எந்தப் பெட்டியில் போடுகிறாரோ அதுவே அவர் தேர்வு செய்த கட்சியாகக் கருதப்படும். எழுதப் படிக்கத் தெரியாத மக்களால் வேட்பாளர்களின் பெயர்களையோ, சின்னங்களையோ புரிந்துகொள்ள முடியாது என்பதால் இந்த ஏற்பாடு.
காங்கிரஸ் கட்சிக்கு மஞ்சள் நிறப் பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும் கே.பி. சுந்தராம்பாளும் அவ்வை சண்முகமும் தங்களுடைய நாடகங்களில் பாடப்பட்ட பிரபலமான பாடல்களைப் பாடுவார்கள். கூட்டம் சேர்ந்ததும் காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேசுவார்கள். சுந்தராம்பாள், மஞ்சளின் மருத்துவ குணங்களையும் அதன் மங்களகரமான அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பேசுவார்.
‘அப்படிப்பட்ட மஞ்சளின் நிறம்தான் காங்கிரஸின் மஞ்சள்’ என்று முடிப்பார். வாக்காளர்கள் மறக்காமல், மஞ்சள் பெட்டிக்கே தங்களுடைய வாக்குகளைத் தர வேண்டும் என்பது அவர்களுடைய மனங்களில் பதியவைக்கப்படும். மஞ்சள் பெட்டிக்கே வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தங்களுடைய பேச்சை முடித்துக்கொள்வார்கள்.
தஞ்சாவூர் காமுகண்ணம்மாள் என்ற பிரச்சாரகர் அதே மஞ்சள் நிறத்தை வேறொருவகையில் நெஞ்சில் பதியவைப்பார். மூக்குப்பொடியின் நிறமும் மஞ்சள்தான் என்பதை அவர் வேடிக்கையாகக் கையாள்வார். மூக்குப்பொடியின் மகிமையைக் குறித்து எல்லோரும் சிரிக்கும் வகையில் சிறிதுநேரம் பேசுவார். பிறகு, வாக்கு களை மறக்காமல் ‘மூக்குப்பொடி பெட்டி'யில் போடுமாறு கோருவார்.
கே.பி. சுந்தராம்பாள், முசிறி சுப்பிரமணிய ஐயர் பாடிய பாடல்களும் காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோள்களும் தொகுக்கப்பட்டு, கிராமபோன் ரெகார்டாக தமிழ்நாடெங்கும் அக் காலத்தில் வலம் வந்தன. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு இப்படிக் கொடிகட்டிப் பறந்ததால் மாற்றுக் கட்சியினர், தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாகக் களத்திலிருந்தே விலகிவிடுவார்கள்.
காமராஜர் எனும் நாயகர்
தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே ஒரு வேட்பாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவர்தான் கே. காமராஜ் நாடார்! சாத்தூர் – அருப்புக்கோட்டை ஊரகத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட காமராஜ், போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் செய்தித்தாள்கள் ஒரு சார்பாக தேர்தல் பிரச்சாரம் செய்தாலும் கூட, தேர்தல் ஆணையத்தின் கண்டனத்துக்கு உள்ளாகாமல் தப்பின.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகச் செய்திகளையும், பேட்டிகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டதை அந்த நாளில் யாரும் ஒரு சார்பான நடவடிக்கை என்று கருதாமல், தேச பக்தியின் வெளிப்பாடாகவே கருதி மகிழ்ந்தனர். ‘மஞ்சள் பெட்டியை நிரப்புங்கள்' என்று அன்றை ‘தி இந்து' ஆங்கிலப் பத்திரிகை துணிச்சலாக அறிவுறுத்தவே செய்தது.
‘காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று வாக்காளர்களை வலியுறுத்தவே தேவையில்லை' என்றே ‘தி இந்து' வெளிப்படையாகத் தெரிவித்தது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக, பிப்ரவரி 14-ம் தேதி, என்.எஸ். வரதாச்சாரி என்ற காங்கிரஸ் வேட்பாளரை, திருவல்லிக்கேணியில் சில குண்டர்கள் அடித்துவிட்டார்கள். தலையில் கட்டுடன் என்.எஸ். வரதாச்சாரியார் காங்கிரஸ் ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கிச் சென்ற செய்தியை ‘தி இந்து' படத்துடன் வெளியிட்டது.

பிப்ரவரி 24-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில், என்.எஸ். வரதாச்சாரி பட்ட அடி வீண் போகவில்லை என்பதை உணர்த்தின. சென்னை மாகாணத்தில் அன்றிருந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் 74%-ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. இந்தியாவின் எந்த மாகாணத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு அப்படியொரு மகத்தான வெற்றி கிட்டவேயில்லை!
தமிழில்: சாரி © தி இந்து
சென்னை அன்று


Bank%20Of%20Madras-1935.gif

Bank Of Madras-1935




Chennai%20Ambulances-1940.jpg
Chennai Ambulances-1940



Chennai%20Car%20Show%20Room-1913.gif

Chennai Car Show Room-1913




Chennai%20Central%20Railway%20Station-1920.jpg

Chennai Central Railway Station-1920


Chennai Central Railway Station-1925
Chennai%20Central%20Train%20Station.jpg






Chennai Central Train Station
Chennai%20Chepauk%20Cricket-1891.jpg
Chennai Chepauk Cricket-1891





Chennai%20Egmore%20Railway%20Station.jpg


Chennai Egmore Railway StationChennai%20Egmore%20Station-1920.jpg



Chennai Egmore Station-1920
Chennai%20Egmore%20Waiting%20room-1920.jpg



Chennai Egmore Waiting room-1920
Chennai%20Esplanade-1920.jpg
Chennai Esplanade-1920




Chennai ESPLANADE
Chennai%20ESPLANADE.jpgChennai%20First%20Line%20Beach-1915.jpg


























Chennai First Line Beach-1915



Chennai%20Ford%20Show%20Room-1917.gif
Chennai Ford Show Room-1917



Chennai%20Fort%20ST%20George%201700s.jpg
Chennai Fort ST George 1700s



Chennai%20HARBOUR-1891.jpg
Chennai HARBOUR-1891



Chennai%20Library-1913.gif
Chennai Library-1913



Chennai%20Marina%20beach%20.jpg
Chennai Marina beach



Chennai%20Marina%20beach-1890.jpg
Chennai Marina beach-1890



Chennai%20Market%20(Kothaval%20Chawadi)-%201939.jpg
Chennai Market (Kothaval Chawadi)- 1939



Chennai%20Moubray%20Road-1885.jpg
Chennai Moubray Road-1885



Chennai%20MUNROE%20STATUE.jpg
Chennai MUNROE STATUE



Chennai%20Mylapore-1906.jpg
Chennai Mylapore-1906



Chennai%20Mylapore-1939.jpg
Chennai Mylapore-1939



Chennai%20Napier%20Bridge-1895.jpg
Chennai Napier Bridge-1895



Chennai%20Old%20Esplanade.jpg
Chennai Old Esplanade



Chennai%20Old%20High%20Court.jpg
Chennai Old High Court



Chennai%20Old%20Mosque.jpg
Chennai Old Mosque



Chennai%20Old%20Mount%20Road%20Anna%20salai-1905.jpg
Chennai Old Mount Road Anna salai-1905



Chennai%20Old%20Mount%20Road%20Anna%20salai.jpg
Chennai Old Mount Road Anna salai



Chennai%20PARADE-GROUND.jpg
Chennai PARADE-GROUND



Chennai%20Parrys%20Corner-1890.jpg
Chennai Parrys Corner-1890



Chennai%20PRESIDENCY-COLLEGE.jpg
Chennai PRESIDENCY-COLLEGE



Chennai%20Pycrofts%20Road-1890.jpg
Chennai Pycrofts Road-1890



Chennai%20RIPPON-BUILDING.jpg
Chennai RIPPON-BUILDING



Chennai%20SPENCERS.jpg
Chennai SPENCERS



Chennai City Map-1909
FIRST%20EVER%20CHENNAI%20MASTER%20PLAN.jpg


FIRST EVER CHENNAI MASTER PLAN
Madras%20high%20courts_1895.png



Madras high courts_1895
Madras%20view%20from%20the%20harbor%201895.png



Madras view from the harbor 1895
Old%20Chennai%20SENATE-HOUSE.jpg







































































Old Chennai SENATE-HOUSE
Situationsplan_von_Madras_1888.jpg



Situationsplan_von_Madras_1888
SR%20Headquarters-1922.jpg



SR Headquarters-1922
St.%20Mary's%20Church%2c%20Madras%20.jpg
St. Mary's Church Madras
                                                                           நன்றி- கூகுள்

சென்னையின் சில சுவையான முதல்கள் இங்கே :
* இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்கா இருக்கும் ஒரே ஊர் சென்னை தான். கிண்டி தேசிய பூங்கா தான் அந்த பூங்கா
*இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலேயே ரெஜிமென்ட் சென்னையில் எழுந்தது தான். இப்பொழுது இருக்கும் ராணுவத்தின் ரெஜிமென்ட்களில் மூத்த ரெஜிமென்ட் மெட்ராஸ் ரெஜிமன்ட் தான்.
* இந்தியாவின் முதல் ரேடியோ சேவை சென்னையில் எழுந்தது தான். பிரசிடன்சி ரேடியோ க்ளப் என்கிற கிருஷ்ணஸ்வாமி செட்டியால் துவங்கப்பட்ட இந்த ரேடியோ சர்வீஸ் துவங்கிய ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான் அரசே ரேடியோ சேவையை துவங்கியது. இந்த வருடத்தோடு அந்த ரேடியோ சேவை ஆரம்பித்து தொன்னூறு வருடங்கள் ஆகின்றன.
* இந்தியாவின் முதல் வங்கி ஆளுனர் க்ரிபோர்ட் அவர்களால் 1682 இல் துவங்கப்பட்ட மெட்ராஸ் வங்கி தான்.
* ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை எழுந்ததும் சென்னையில் தான். Madras Eye Infirmary என்று பெயர்கொண்ட அது உருவான வருடம் 1819 !
* இந்தியாவின் முதல் நோக்ககம் எழுந்ததும் சென்னையில் தான். நுங்கம்பாக்கத்தில் இருநூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன் எழுந்தது அது. இந்தியாவின் முதல் திரிகோண அளவையியல் நடைபெற்றது பரங்கி மலையில் !
* இந்தியாவிலேயே முதன் முதலில் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தது மெட்ராஸ் மாநகராட்சி தான்.
* இந்தியாவிலேயே கோயில் நிலங்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறை உருவானதும் விடுதலைக்கு முந்திய நீதி கட்சியின் ஆட்சி காலத்தில் தான் .
* இந்தியாவின் மிக பழமையான பொறியியல் கல்விக்கூடம் கிண்டி பொறியியல் கல்லூரி தான். இந்தியாவில் மெக்கானிகல்,எலெக்ட்ரிகல் ஆகிய துறைகளில் பொறியியல் பாடத்தை முதன் முதலில் ஆரம்பித்தது இங்கே தான்.
* இந்தியாவின் முதல் கார்பரேசன் சென்னை கார்பரேசன் தான். உலகின் இரண்டாவது பழமையான கார்பரேசன் அது தான். இது எழ காரணம் ரிப்பன். அவர் பெயரால் எழுந்தது தான் ரிப்பன் கட்டிடம்.
இன்றொடு சென்னைக்கு வயசு 375 ! ‪#‎MADRAS‬ 375 ‪#‎chennai375‬‪#‎chennaiday375‬
- பூ.கொ.சரவணன்



சென்னை 375 /3
1900 தில் அன்றைய சென்னை நகராட்சியின் கமிசனராக இருந்த மூர் தொடங்கி வைத்ததுதான் மூர்மார்கெட்.காசு இருந்தால் இங்கு தாயை தவிர,என்ன வேணுமானாலும் வாங்கலாம் என்று சொன்னதே மூர்மார்கெட்டின் சிறப்பாகும்.சென்னைக்கு வந்து சில ஆண்டுகள் போன பின்பு, சுற்றி பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பி போனேன்.எக்க சக்க கூட்டம்.பொருளை தொட்டாலே நாம் வாங்காமல் வெளியே வர இயலாது.தலையில் கட்டி விடுவார்கள்.இது தெரியாமல் சும்மா அன்று சிங்கப்பூர் பேசனாக இருந்த ஒரு செருப்பை ஆசையாக தொடப் போய்,அழ வைத்து விட்டார்கள் வியாபாரிகள்.வாங்காம போன அவ்வளவுதான் மகனே என்று மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள்.இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்.ஏன் அந்த வியாபாரிகள் அப்படி நடந்து கொண்டார்கள் என்று?நிறைய கடைகள்;போட்டா போட்டி அதிகம்.வேடிக்கை பார்ப்போர் அதிகம்;வாங்குவோர் குறைவு என்ற சூழலில்,ஏதாவது ஒரு பொருளை விற்றால்தான் சாப்பிட முடியும் என்ற சிக்கலில் அவர்கள் அப்படி நடந்து கொண்டது சரியோ தவறோ வேறு வழியில்லை அவர்களுக்கு.





ம.பொ.சி.யை மறந்த சென்னை 375

சென்னை நகரம் 22.8.1639ஆம் ஆண்டு உருவான நாளை "சென்னை தினம்" எனும் பெயரில் கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு செய்தி ஊடகங்களில் சென்னை குறித்து வரலாற்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சென்னையை மீட்க தமிழர்கள் ஆந்திரர்களோடு நடத்திய போராட்டம் குறித்தும் விடாப்பிடியாகப் போராடி தமிழகத்திற்கு சென்னையை மீட்டுத் தந்த ம.பொ.சிவஞானம் குறித்தும் எந்தப்பதிவும் இல்லை. தமிழரல்லாதவர்கள் ஊடகத்துறையில் செல்வாக்கு செலுத்துவதால் சென்னை மீட்பு போராட்டம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

சென்னை மீட்பு வரலாற்றை இனி சுருக்கமாக காண்போம். சென்னை நகரம் தொன்று தொட்டு தமிழர்களின் பூமியாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆண்ட தொண்டை மண்டலப்பகுதியில் கட்டுப்பட்ட பகுதியாகும். பிற்காலத்தில் தொடர்ந்து படையெடுத்து வந்த தமிழரல்லாதவர்கள்  கையில் சென்னை நகரம் இருந்த போதும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இருந்துள்ளனர்.

1912ஆம் ஆண்டில் ஆந்திரர்கள் ஆந்திர மகாசபை அமைத்து மொழிவழி மாகாணம் கேட்டுப் போராடி வந்தனர். அப்போது ஆந்திரர்கள் சென்னையில் சிறுபான்மையினராக வாழ்ந்த போதிலும் சென்னை நகரை தனக்கு சொந்தமாக்க விரும்ப வில்லை. 1920ஆம் ஆண்டில் நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதில் ஆந்திரர்கள் தான் முதலமைச்சராக வந்தனர். 1920 முதல் 1947 வரை பதவிக்கு வந்த அறுவரில் ஐவர் ஆந்திரர். ஒருவர் தமிழர். இதன் காரணமாக சென்னை நகரம் ஆந்திரர்களுக்கு சொந்தம் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்கு (1947) முன்னர் டாக்டர். இராசேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணய மன்றம் அமைக்கப்பட்ட போது அதன் ஆலோசகராக சர்.பி.என். இராவ் என்பவர் இருந்தார். அவர் தமிழினத்திற்கு எதிரான ஒரு திட்டத்தை முன் வைத்தார். அத்திட்டத்தின் படி சென்னை மாகாணத்தை பிரிக்காமல் நிர்வாக வசதி என்ற பெயரில் இரண்டாகப் பிரிப்பது என்றும், அதன்படி வட சென்னை துணைமாகாணம், தென் சென்னை துணை மாகாணம் என்று இரண்டாக செயல்படுவது என்றும், இரு துணை மாகாணங்களுக்கும் சென்னை பொது தலைநகராக இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை தெலுங்குத் தலைவர்களான டாக்டர். இராதா கிருஷ்ணன், வி.வி.கிரி, தங்குத்தூரி பிரகாசம் பந்துலு ஆகியோர் ஆதரித்தனர். ஆந்திர மகாசபையும் வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது. சர்.பி.என்.ராவ் திட்டத்தின்படி சென்னை மாகாணம் இரண்டு துணை மாகாணமாகப் பிரிந்திருந்தால் ஆந்திரருக்கு சென்னையுடன் கூடிய மொழிவழி ஆந்திர மாகாணம் கிடைத்திருக்கும். ஆனால் தமிழருக்கோ சென்னையை ஆந்திரருக்கு பறிகொடுத்ததோடு, தமிழகம், மலபார் மாவட்டம், தென்கன்னட மாவட்டங்கள் இணைந்த மூன்று மொழி பேசும் கலப்புத் துணை மாகாணம் அமைந்திருக்கும். நல்லவேளையாக அன்றைக்கு ம.பொ.சிவஞானம் தமிழர்கள் சார்பில் நின்று குரல் கொடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து சென்னையைத் துண்டாடும் நாள் சென்னையில் இரத்த ஆறு ஓடும் நாளாகத்தான் இருக்க முடியும். தங்கள் தலைகளைக் கொடுத்தேனும் தமிழ்நாட்டின் தலை நகரைக் காத்திட வேண்டும் என்று 'தமிழ்முரசு' ஏட்டில் (1.4.1947) முழங்கினார். அதன் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.

1952ஆம் ஆண்டில் மீண்டும் ஆந்திரர்கள் சென்னையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பொட்டிஸ்ரீராமுலு என்பவர் ஆந்திர மாநிலக் கோரிக்கையோடு 'மதராஸ் மனதே' என்று  சென்னை மைலாப்பூரில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார். அவரை நேரில் சந்தித்துப் பேசிய ம.பொ.சி. அவர்கள், "சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால் தமிழரசு கழகம் ஆந்திரர்களுக்கு துணை நிற்கும்" என்று பதிலுரைத்தார்.

16.12.1952இல் பொட்டி ஸ்ரீராமுலு 58வது நாளில் உயிர் துறந்த போது ஆந்திரத்தில் போராட்டம் வெடித்தது. சென்னையில் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. ஆந்திரர்கள் வெறிகொண்டு தமிழர்களை தலைநகரிலே தாக்கினர். ஆந்திரர் போராட்டத்தை கண்டு அஞ்சிய பிரதமர் நேரு தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுமென்று அறிவித்தார். அப்போது தங்குதூரி பிரகாசம் பந்துலு என்பவர் ஆந்திரத்திற்கு தற்காலிக தலைநகராக சென்னை இருக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை ம.பொ.சி. கடுமையாக எதிர்த்தார். சென்னையை ஆந்திரருக்கு சொந்தமாக்கும் கோரிக்கையை நேரு ஏற்றுக் கொண்டால் உடனே பதவி விலகுவேன் என்றும் அன்றைய முதல்வர் இராசாசி அறிவித்தார். அதன் பிறகு நேரு சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமில்லா தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு சித்தூர் மாலட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்றும், ஆந்திரத் தலைநகர் பற்றி பின்னால் அறிவிக்கப்படும் என்றும் விளக்கம் கூறி ஆந்திரர்களின் கோரிக்கையை புறக்கணித்தார். 1956இல் மொழிவழி மாகாணம் உருவாக்கப்பட்டு சென்னைத் தமிழ் மாகாணத்திற்கு சென்னை தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை மீட்புப் போராட்டத்தில்     திராவிடர் இயக்கத்தினர் எவரும் பங்களிக்க மறுத்தே வந்தனர். மொழிவழித் தேசிய உணர்ச்சி திராவிட இயக்கத்தினர் எவருக்கும் இல்லையென்பது தான் கசப்பான உண்மையாகும்.

சென்னையை மீட்டுக் கொடுத்த ம.பொ.சிக்கு சென்னை நகரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் சிலை நிறுவப்பட்டது. ம.பொ.சி.யை மறந்து விட்டு "சென்னை தினம்" கொண்டாடுவது தலையில்லாத முண்டத்தை கொண்டாடுவதற்கு ஒப்பாகும். வரும் ஆண்டிலாவது  சென்னையை மீட்டுத் தந்த அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.  தமிழ்த்தேசிய அமைப்புகளும் சென்னை மீட்பு வரலாற்றை இந்நாளில் தமிழர்களிடம் கொண்டு சேர்க்குமாறு வேண்டுகிறோம்!

Maposimadhavi Baskeran


ம.பொ.சி.யை மறந்த சென்னை 375
சென்னை நகரம் 22.8.1639ஆம் ஆண்டு உருவான நாளை "சென்னை தினம்" எனும் பெயரில் கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு செய்தி ஊடகங்களில் சென்னை குறித்து வரலாற்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சென்னையை மீட்க தமிழர்கள் ஆந்திரர்களோடு நடத்திய போராட்டம் குறித்தும் விடாப்பிடியாகப் போராடி தமிழகத்திற்கு சென்னையை மீட்டுத் தந்த ம.பொ.சிவஞானம் குறித்தும் எந்தப்பதிவும் இல்லை. தமிழரல்லாதவர்கள் ஊடகத்துறையில் செல்வாக்கு செலுத்துவதால் சென்னை மீட்பு போராட்டம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
சென்னை மீட்பு வரலாற்றை இனி சுருக்கமாக காண்போம். சென்னை நகரம் தொன்று தொட்டு தமிழர்களின் பூமியாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆண்ட தொண்டை மண்டலப்பகுதியில் கட்டுப்பட்ட பகுதியாகும். பிற்காலத்தில் தொடர்ந்து படையெடுத்து வந்த தமிழரல்லாதவர்கள் கையில் சென்னை நகரம் இருந்த போதும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக இருந்துள்ளனர்.
1912ஆம் ஆண்டில் ஆந்திரர்கள் ஆந்திர மகாசபை அமைத்து மொழிவழி மாகாணம் கேட்டுப் போராடி வந்தனர். அப்போது ஆந்திரர்கள் சென்னையில் சிறுபான்மையினராக வாழ்ந்த போதிலும் சென்னை நகரை தனக்கு சொந்தமாக்க விரும்ப வில்லை. 1920ஆம் ஆண்டில் நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதில் ஆந்திரர்கள் தான் முதலமைச்சராக வந்தனர். 1920 முதல் 1947 வரை பதவிக்கு வந்த அறுவரில் ஐவர் ஆந்திரர். ஒருவர் தமிழர். இதன் காரணமாக சென்னை நகரம் ஆந்திரர்களுக்கு சொந்தம் என்ற கருத்து உருவாக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்கு (1947) முன்னர் டாக்டர். இராசேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணய மன்றம் அமைக்கப்பட்ட போது அதன் ஆலோசகராக சர்.பி.என். இராவ் என்பவர் இருந்தார். அவர் தமிழினத்திற்கு எதிரான ஒரு திட்டத்தை முன் வைத்தார். அத்திட்டத்தின் படி சென்னை மாகாணத்தை பிரிக்காமல் நிர்வாக வசதி என்ற பெயரில் இரண்டாகப் பிரிப்பது என்றும், அதன்படி வட சென்னை துணைமாகாணம், தென் சென்னை துணை மாகாணம் என்று இரண்டாக செயல்படுவது என்றும், இரு துணை மாகாணங்களுக்கும் சென்னை பொது தலைநகராக இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை தெலுங்குத் தலைவர்களான டாக்டர். இராதா கிருஷ்ணன், வி.வி.கிரி, தங்குத்தூரி பிரகாசம் பந்துலு ஆகியோர் ஆதரித்தனர். ஆந்திர மகாசபையும் வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது. சர்.பி.என்.ராவ் திட்டத்தின்படி சென்னை மாகாணம் இரண்டு துணை மாகாணமாகப் பிரிந்திருந்தால் ஆந்திரருக்கு சென்னையுடன் கூடிய மொழிவழி ஆந்திர மாகாணம் கிடைத்திருக்கும். ஆனால் தமிழருக்கோ சென்னையை ஆந்திரருக்கு பறிகொடுத்ததோடு, தமிழகம், மலபார் மாவட்டம், தென்கன்னட மாவட்டங்கள் இணைந்த மூன்று மொழி பேசும் கலப்புத் துணை மாகாணம் அமைந்திருக்கும். நல்லவேளையாக அன்றைக்கு ம.பொ.சிவஞானம் தமிழர்கள் சார்பில் நின்று குரல் கொடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து சென்னையைத் துண்டாடும் நாள் சென்னையில் இரத்த ஆறு ஓடும் நாளாகத்தான் இருக்க முடியும். தங்கள் தலைகளைக் கொடுத்தேனும் தமிழ்நாட்டின் தலை நகரைக் காத்திட வேண்டும் என்று 'தமிழ்முரசு' ஏட்டில் (1.4.1947) முழங்கினார். அதன் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
1952ஆம் ஆண்டில் மீண்டும் ஆந்திரர்கள் சென்னையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பொட்டிஸ்ரீராமுலு என்பவர் ஆந்திர மாநிலக் கோரிக்கையோடு 'மதராஸ் மனதே' என்று சென்னை மைலாப்பூரில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார். அவரை நேரில் சந்தித்துப் பேசிய ம.பொ.சி. அவர்கள், "சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால் தமிழரசு கழகம் ஆந்திரர்களுக்கு துணை நிற்கும்" என்று பதிலுரைத்தார்.
16.12.1952இல் பொட்டி ஸ்ரீராமுலு 58வது நாளில் உயிர் துறந்த போது ஆந்திரத்தில் போராட்டம் வெடித்தது. சென்னையில் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. ஆந்திரர்கள் வெறிகொண்டு தமிழர்களை தலைநகரிலே தாக்கினர். ஆந்திரர் போராட்டத்தை கண்டு அஞ்சிய பிரதமர் நேரு தனி ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுமென்று அறிவித்தார். அப்போது தங்குதூரி பிரகாசம் பந்துலு என்பவர் ஆந்திரத்திற்கு தற்காலிக தலைநகராக சென்னை இருக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை ம.பொ.சி. கடுமையாக எதிர்த்தார். சென்னையை ஆந்திரருக்கு சொந்தமாக்கும் கோரிக்கையை நேரு ஏற்றுக் கொண்டால் உடனே பதவி விலகுவேன் என்றும் அன்றைய முதல்வர் இராசாசி அறிவித்தார். அதன் பிறகு நேரு சென்னை நகரம் அல்லாத தகராறுக்கு இடமில்லா தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு சித்தூர் மாலட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்றும், ஆந்திரத் தலைநகர் பற்றி பின்னால் அறிவிக்கப்படும் என்றும் விளக்கம் கூறி ஆந்திரர்களின் கோரிக்கையை புறக்கணித்தார். 1956இல் மொழிவழி மாகாணம் உருவாக்கப்பட்டு சென்னைத் தமிழ் மாகாணத்திற்கு சென்னை தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை மீட்புப் போராட்டத்தில் திராவிடர் இயக்கத்தினர் எவரும் பங்களிக்க மறுத்தே வந்தனர். மொழிவழித் தேசிய உணர்ச்சி திராவிட இயக்கத்தினர் எவருக்கும் இல்லையென்பது தான் கசப்பான உண்மையாகும்.
சென்னையை மீட்டுக் கொடுத்த ம.பொ.சிக்கு சென்னை நகரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் சிலை நிறுவப்பட்டது. ம.பொ.சி.யை மறந்து விட்டு "சென்னை தினம்" கொண்டாடுவது தலையில்லாத முண்டத்தை கொண்டாடுவதற்கு ஒப்பாகும். வரும் ஆண்டிலாவது சென்னையை மீட்டுத் தந்த அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். தமிழ்த்தேசிய அமைப்புகளும் சென்னை மீட்பு வரலாற்றை இந்நாளில் தமிழர்களிடம் கொண்டு சேர்க்குமாறு வேண்டுகிறோம்!


சென்னை மண்ணை உருவாக்கி பண்படுத்திய குடிகளை சென்னையிலிருந்து அப்புறப்படுத்தி....சென்னை வெளியே வீசியெறிந்துவிட்டு சென்னையின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது சென்னை.
சென்னையிலிருந்து அகதியாக்கப்பட்ட அந்த குடிகளுக்கு பேரியக்கங்களின் கவனம் இதுநாள் வரை கிட்டவில்லை.
ஆனா, தெலுங்கன் வந்தேறின்னு தஞ்சாவூர்ல இருந்தும், மதுரைல இருந்தும், நெல்லைல இருந்தும் வந்து இங்கன பேசின்னு திரியுறானுக...
நாம் சென்னைக்கு நன்றி கடன் பட்டவர்கள் அல்ல, சென்னையின் தொடக்க நாள் குடிகளுக்கே நன்றிக்கடன் பட்டவர்கள்.
முடிஞ்சா செம்மஞ்சேரி, கண்ணகி நகருக்கு இன்னைக்காவது ஒரு எட்டு போய் பாத்திட்டு வாங்க....உங்கள் சென்னை சொகுசுக்கு பலி கொள்ளப்பட்டவர்களின் வாழ்க்கையை நெருக்கமாக புரிந்து கொள்ள முடியும்...வளர்ச்சி என்னும் முழக்கத்தின் கோர முகத்தால் கண்ணிருந்தும் குருடர்களாய் காணாமல் தவறவிட்ட கயமைத்தனம் புரியும்....
சென்னை சொகுசுவாசிகளே... செய்வீர்களா.....ம்...ஹூம்...நமக்கு வளர்ச்சிதானே முக்கியம்.....




சென்னைக்குப் பெருமை சேர்த்த முதல் விமானம்
-------------------------------------------------------------------------
ஆசியாவின் முதல் விமானம் எங்கே பறந்தது தெரியுமா? நாட்டின் பல முதன்மைகளைப் பெற்ற நமது பழைய மெட்ராஸில்தான். உலகின் முதல் வெற்றிகரமான விமானத்தை ரைட் சகோதரர்கள் செலுத்தி, அடுத்த 7 ஆண்டுகளில் இந்த விமானம் சென்னையில் றெக்கை கட்டிப் பறந்திருக்கிறது.
தின்பண்டத் தயாரிப்புத் தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தவர் இத்தாலியிலுள்ள மெசினா பகுதியைச் சேர்ந்த ஜாகோமோ டி ஏஞ்சலிஸ் (Giacomo D'Angelis). வியாபாரம் செய்யும் எண்ணத்துடன் 1880-ல் இந்தியாவுக்கு வந்து மேசன் ஃபிரான்சேஸ் நிறுவனத்தை அன்றைய மெட்ராஸ் மவுண்ட் ரோடில் (இன்றைய அண்ணா சிலை சந்திப்பு அருகே) தொடங்கினார். இந்தியாவில் உணவு விநியோகிக்கும் சேவை யைத் தொடங்கிய முதல் நிறுவனம் அதுதான். ஆம்ப்டில் பிரபு காலத் தில் மெட்ராஸ் ஆளுநரின் அதிகாரப்பூர்வ உணவு விநியோகஸ்தராக ஏஞ்சலிஸின் நிறுவனம் இருந்திருக்கிறது. இதில் நல்ல அனுபவம் பெற்ற டி ஏஞ்சலிஸ், 1906-ல் ஓட்டல் டி ஏஞ்சலிஸ் என தன் பெயரிலேயே ஒரு உணவகத்தைத் தொடங்கினார். இந்த ஓட்டல் இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாகக் கருதப்படுகிறது.
சென்னையிலேயே முதன்முறையாக இந்த ஓட்டலில்தான் மின் தூக்கி, மின்விசிறிகள், ஐஸ் தயாரிப்பு அமைப்பு, குளிர்பதனக் கிடங்கு, வெந்நீர்க் குழாய்கள் போன்றவை இருந்திருக்கின்றன.
டி ஏஞ்சலிஸ் நடத்திய அந்த ஓட்டல் இருந்த இடம் எதுவென்றால், இன்றைய சென்னை அண்ணா சாலை கெயிட்டி திரையரங்கம் அருகே உள்ள பாட்டா ஷோரூம் இருந்த இடம்தான்.
ஜாகோமோவுக்குப் பின்னால் சுவாரசியமான மற்றொரு கதை இருக்கிறது. ஓட்டல் ஆரம்பித்து கொஞ்ச காலத்திலேயே பிரான்சைச் சேர்ந்த பிலாரியோ, விமானம் மூலமாகவே ஆங்கிலேயக் கால்வாயைக் கடந்து ஆச்சரிய சாகசம் நிகழ்த்திய செய்தி ஜாகோமோவின் கண்களில் பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பம் மீது தீவிர ஆசை கொண்டிருந்த ஜாகோமோவுக்கு, தானும் பறக்க வேண்டும் என்று ஆசை றெக்கை வெளியே எட்டிப் பார்த்தது. தானே ஒரு விமானத்தை வடிவமைத்தார். அது ஒரு பைபிளேன். ரைட் சகோதரர்கள் ஓட்டியது போன்று, மேலும் கீழும் இரண்டு றெக்கைகள் பொருத்தப்பட்டதே பைபிளேன்.
பிறகு மெட்ராஸ் சிம்சன் நிறுவனத்தில், அதை உருவாக்கித் தர அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தில் இருந்த அன்றைய பிரபல பொறியாளர் ஜான் கிரீன் அதை வடிவமைத்திருக்கலாம். ஏனென்றால், விமானத்தை உருவாக்கியது சிம்சன் நிறுவனம் என்று பாரதியாரின் ‘இந்தியா’ இதழ் குறிப்பிடுகிறது. ‘‘இவ்விமானம் சென்னையில் டாஞ்சலிஸ் ஓட்டலின் பிரெஞ்சு முதலாளி டாஞ்சலிஸின் திட்டப்படி சிம்சன் கம்பெனி பட்டறையில் ‘தமிழ் வேலைக்காரர்களால்’ கட்டப்பெற்றது’’ என்று பாரதியார் எழுதியிருக்கிறார்.
சிறிய இன்ஜின் கொண்ட அந்த விமானத்தை பல்லாவரம் மலைப் பகுதியில் ஓட்டி முதலில் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார் டி ஏஞ்சலிஸ். அதில் நம்பிக்கை கிடைக்கவே, தீவுத் திடலில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்து பறந்து காட்டியிருக்கிறார். அது நடந்த நாள் 10 மார்ச் 1910. இந்த விமானத்தில் ஒரே நாளில் பல முறை அவர் பறந்து காட்டியிருக்கிறார். அவருடைய அழைப்புக்கு ஏற்ப கூட்டத்தில் இருந்த ஒருவரும், விமானத்தில் உடன் பறந்துள்ளார்.
ஆசியாவிலேயே ஓடிய முதல் எரிசக்தி விமானம் அதுதான். இதன் மூலம் ஆசியாவிலும் இந்தியாவிலும் முதல் விமானத்தை ஓட்டியவர் என்ற பெருமையை டி ஏஞ்சலிஸ் பெறுகிறார். இந்தச் செய்தி ராயல் ஏரோ கிளப் இதழான ‘ஃபிளைட்'டில் உடனடியாக, அதாவது 1910 மார்ச் 26-ம் தேதியே பதிவாகியுள்ளது. லெவிட்டஸ் நிறுவனமே இந்தத் தகவலை வெளியிட்டது. இந்திய விமான வரலாற்றிலோ அலகாபாதில்தான் முதல் விமானம் பறந்ததாக பதிவாகியுள்ளது. ஆனால், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னதாகவே டி ஏஞ்சலிஸ் இந்த விமானத்தை ஓட்டியிருக்கிறார்.
‘‘இந்தியாவில் மட்டுமல்ல; ஆசியாவில் பறந்த முதல் விமானமும் ஏஞ்சலிஸ் ஓட்டிய விமானம்தான்’’ என்று விமான வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஓய்வுபெற்ற கேப்டனுமான கபில் பார்கவா குறிப்பிட்டிருக்கிறார். 1910 டிசம்பர் 10-ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் பறந்ததாகவும், அதே ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது விமானம் பறந்ததாகவும் பதிவுகள் உள்ளன. வழக்கம்போல இதிலும் முந்திக்கொண்டு உயரப் பறந்து, வானை அளந்து, சாதனை படைத்துவிட்டது நமது மெட்ராஸ்.
இந்தச் சாதனையில் இன்றைய அண்ணா சாலையும் ஒரு தனிப் பெருமையைப் பெறுகிறது. டி ஏஞ்சலிஸின் ஓட்டல் இருந்த இடம், சிம்சன் நிறுவனம், தீவுத்திடல் ஆகிய மூன்றும் அமைந்திருக்கும் இடம் மெட்ராஸின் அன்றைய மவுன்ட் ரோடு, சென்னையின் இன்றைய அண்ணா சாலை!
     இது இன்னும் தொடரும்!