பகத்சிங் பிறந்த நாளையொட்டி 28 / 09 / 2023
Bagathsingh Reader எனும் புத்தகத்திலிருந்து திரு. ஆர். பட்டாபிராமன் எடுத்து வழங்கியது.
புரட்சிக்காரர்களின்
கண்ணியம் குறித்த பகத்சிங்கின் பதிவு ஒன்றை பார்க்க நேர்ந்தது. பகத்சிங்கின் வழிகாட்டி என
கருதப்படும் கர்த்தார் சிங் சரபா அவர்களைப் பற்றிய பதிவு அது.
கர்த்தார்
சிங் சரபா (
சரபா என்பது
பஞ்சாபில் உள்ள ஒரு கிராமம்.) 1913இல் அவர்களுடன் இணைந்து கதிர் கட்சியை துவங்கியவர். வழக்கம் போல் புரட்சியாளருக்கு நேர்வதைப் போல தேச
துரோக குற்றம் சாட்டப்பட்டு, நவம்பர் 1915இல்
தூக்கிலிடப்பட்டவர் கர்த்தார் சிங் சரபா.
ஒருமுறை
கர்த்தார் சிங் ஆயுதங்கள் வாங்க நிதி உதவி என்பதற்கான விவாதத்தில் சக போராளிகளுடன்
பங்கேற்றார்.
நிதி தேவை
என்பதற்காக புரட்சிகர நடவடிக்கைகளை தள்ளிப் போட முடியாது. கொள்ளையடித்து நிதி திரட்டி கொள்ளலாம்
என்ற அவரது கருத்தை
ஏற்க கூட்டாளிகள் தயக்கம் காட்டினர். பாய் பரமானந்த் இதற்கு உடன்படுவார் எனச் சொல்லி, ஏற்கச் செய்கிறார் கர்த்தார் சிங்.
கிராமம்
ஒன்றில் செல்வந்தர் வீட்டில் கொள்ளை என நுழைகின்றனர். பணத்தை எடுத்துக் கொண்டுவரும்போது
வீட்டில் இருந்த அழகான பெண்ணிடம் கதர் கூட்டாளி ஒருவர் வம்பு செய்யத் துணிகிறார். கர்த்தார் அப்பெண்ணின் கையை அந்த
மனிதனிடமிருந்து விடுவித்து, “இதற்கு நம் இயக்கத்தில் உடனடி தண்டனை மரணம் தான், சூழல் சரியல்ல; வெளியேறு. அதற்கு முன் அந்தப் பெண்ணிடம்
மன்னிப்புக் கேள். தாயார் காலில் விழுந்து தவறுக்கு வருந்து”
என கட்டளை
இடுகிறார்; அந்த மனிதனும்
அவ்வாறே செய்கிறார்.
சற்று
துணிந்த தாயார் இவ்வளவு கண்ணியமான நீங்கள் கொள்ளையில் ஈடுபடுவது அழகா என்கிறார். கர்த்தார் உடனே
இந்தப் பணம் நாங்கள் சுகபோகமாக வாழ அல்ல! நாட்டின் விடுதலைக்காகப் பயன்படப் போகிறது என்கிறார். பெண் திருமணத்திற்காக பணம்
வைத்திருந்தோம் என்று பெருமூச்சு விடுகிறார் தாயார். உடனே கர்த்தார் அம்மா எவ்வளவு பணம்
வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று எடுத்து வைக்கிறார். இந்தப் பெண்மணியும் நீங்கள் வேண்டியதை
எடுத்துக் கொண்டு, மீதியை நல்ல காரியம் என்கிறீர்கள் - எடுத்துச் செல்லுங்கள் என்று ஆசி வழங்கினார்.
இந்தப்
பதிவில் பகத்சிங் எந்தக் கிராமத்தில் இது நடந்தது? எவர் வீடு? எவ்வளவு பணம்? போன்ற விவரங்களைத் தரவில்லை. கொள்ளையின் நோக்கம் சுயநலம் அல்ல என்று
தெளிவுபடுத்துகிறார். பெண்களிடம் கண்ணியமாக புரட்சிக்காரர்கள் நடந்து கொள்ளும் முன்மாதிரியை வைப்பதைக் காண்கிறோம். 19 வயதிலேயே தூக்கை சந்தித்த கர்த்தார் சிங், பகத்சிங்கின் பெரும் நாயகன் ஆனதில்
வியப்பேதும் இல்லை. ‘பகத்சிங் ரீடர்’ இப்படியான ஏராளமான செய்திகளை தரக்கூடிய ஆவணம் ஆகும். வாய்ப்புள்ளோர் வாசிக்கலாம். வரலாற்றின் பக்கம் ஒன்றை அறியலாம்.
திரு .ஆர். பட்டாபிராமன் அவர்களின் ‘என் வாசிப்பு’ எனும் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட
ஒரு பகுதி இது.
பல அரிய
தமிழ், ஆங்கில நூல்களைப்
படித்து அதன் சாரத்தின் சில பகுதிகளை வழங்கியிருக்கிறார் பட்டாபிராமன் அவர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக